கிராமத்து சுவையில் கருவாட்டு குழம்பு... வெறும் 10 நிமிடத்தில் செய்வது எப்படி.?
கிராமத்து சுவையில் பாரம்பரியமான கருவாட்டு குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக கருவாடு குழம்பு என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு வீடு மட்டுமின்றி தெருவே மணக்கும் அளவிற்கு மணம் இருக்கும்.
அதிலும் கிராமத்து சுவையில் கருவாடு குழம்பு என்றால் நாவில் எச்சில் தான் ஊறும். நல்லெண்ணெய் சுவையுடம் கிராமத்து பாணியில் எ்வவாறு கருவாட்டு குழம்பு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
கருவாடு
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 2
பூண்டு - 15 - 20 பல்
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
நல்லெண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்

செய்முறை
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் சேர்த்து, கடுகு, வெந்தயம், உளுந்தம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின்பு இதில் பூண்டு மற்றும் நறுக்கிய சின்னவெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வந்ததும், தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

தக்காளி வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து நன்றாக கலந்துவிடவும். இதனுடன் புளி தண்ணீரையும் சேர்த்து கொதிக்கவிடவும்.
தேவைக்கு ஏற்ப தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் 10 நிமிடம் மூடி போட்டு கொதிக்க விடவும். மற்றொரு கடாயில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அதனுடன் கருவாடை இரண்டு நிமிடம் வறுக்கவும்.

கொதிக்கும் குழம்பில் பொரித்த கருவாட்டை எண்ணெய்யுடன் சேர்த்து கொட்டி கலந்து கொள்ள வேண்டும். பின்பு 5 நிமிடம் கழித்து குழம்பை இறக்கினால் கிராமத்து பாரம்பரியமான கருவாட்டு குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |