டயட்டில் இருகீங்களா? அப்போ இந்த முறையில் ஆரோக்கியமான பொங்கல் சாப்பிடுங்க
பொதுவாகவே ஆண்களானாலும் சரி பெண்களானாலும் சரி தங்களின் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கும்.
ஆனால் தற்காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில், அனைவரும் பெரும்பாலும் அனுபவிக்கும் ஒரு உடல்நல பிரச்சினையாக உடல் பருமன் அறியப்படுகின்றது.

தற்காலத்தில் அதிகரித்த சமூக வலைத்தளங்களின் பெருக்கம், ஒரே இடத்தில் அமர்ந்தபடி மணிக்கணக்கில் வேலை பார்ப்பது, போதியளவு உடற்பயிற்சி இல்லாமை, துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, வாழ்க்கை முறை மாற்றங்கள், மன அழுத்தம், போதிய தூக்கம் இன்மை போன்ற பல்வேறு காரணங்களால் உடல் எடை அதிகரிப்பு மற்றும் தொப்பை பிரச்சினை ஏற்படுகின்றது.
அதனால் உடல் எடையைக் குறைக்க பலரும் தற்காலத்தில் டயட்டில் இருந்து வருகின்றார்கள். அவர்கள் அதிக கலோரிகள் கொண்ட உணவை எவ்வளவு சுவையானதாக இருந்தாலும் சாப்பிடத் தயங்குவார்கள்.

அப்படிப்பட்டவர்கள் கூட இந்த பொங்கல் பண்டிகைக்கு இந்த முறையில்ஆரோக்கியமான திணை பொங்கல் செய்து சாப்பிடலாம்.
குறிப்பாக திணையில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுவதால், இது உணவை எளிதில் செரிமானம் செய்ய துணைப்புரிவதுடன் குடல் புண்கள் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கப்பதற்கும் பெரிதும் துணைப்புரிகின்றது.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த திணையில் அசத்தல் சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
திணை- 2 கப்
பாசிப்பருப்பு - 1 கப்
இஞ்சி - 1 துண்டு
செக்கு தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
மிளகு - சிறிதளவு
சீரகம் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
முந்திரி பருப்பு - சிறிதளவு

செய்முறை
முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் வரகரிசியை எடுத்து சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும், பாசிப்பருப்பை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஊறவைத்துள்ள வரகரிசியுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு இஞ்சியை தோலைச் சீவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.அதேபோல் பச்சை மிளகாயை, இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.

அதனையடுத்து மிளகு, சீரகம் இரண்டையும் ஒன்றிரண்டாக பொடித்துக் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரில் திணை, பாசிப்பருப்பை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள், உப்பு மற்றும் 3 கப் தண்ணீரை விட்டு மூடி 4 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கிக்கொள்ள வேண்டும்.

விசில் போனதும் குக்கரைத் திறந்து நன்றாக மசித்துக் கொள்ளவும். அதன்பின் பாத்திரத்தில் சிறிதளவு செக்கு தேங்காய் எண்ணெயை விட்டுச் சூடாக்க்கி அதில் முந்திரி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மிளகு, சீரகப் பொடியைப் போட்டு தாளித்து
அதன் பின் பொங்கலின் மேல் இந்த தாளிப்பு கலவையை ஊற்றி நன்கு கிளறினால் அவ்வளவு தான் அட்டகாசமாக சுவையில் டயட் திணை பொங்கல் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |