எதிர்நீச்சலில் உயர் பதவியில் இலங்கை அகதி- கதைகளத்தில் புதிய திருப்பம்
எதிர்நீச்சல் சீரியலில் மருமகள்களுக்கு ஆதரவாக களமிறங்கிய கலெக்டர், தான் ஒரு இலங்கை அகதி என ஆழமான உள்ளுணர்வுடன் பேசும் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
எதிர்நீச்சல்
தர்ஷன்– பார்கவி திருமண சதி, ஈஸ்வரி தாக்கப்பட்ட வீடியோ, சக்தி கடத்தப்பட்ட சம்பவம், ஆதி குணசேகரனின் தலைமறைவு என பல ட்விஸ்டுகள் வந்த பின்னரும், கதைக்களம் இப்போது முற்றிலும் வேறு திசையில் திரும்பியுள்ளது.
குணசேகரனுக்கு எதிராக சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மருமகள் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளனர், இவர்களுக்கு ஆதரவாக குணசேகரனின் தாயாரும் களமிறங்கியுள்ளார்.

அதனை சீர்குலைக்க குணசேகரன் குடைச்சல் கொடுத்து கொண்டு இருக்கிறார். இதை தட்டி கேட்க வந்தவர் தான் மதிவதனி கலெக்டர்.
இவர் இந்த சீரியலில் தான் இந்தியாவை சேர்ந்தவர் இல்லை என்றும் அவர் போரில் தன் பெற்றோர்கள் சொந்தங்களை இழந்து மனிதர்களை வெறுத்து அகதி முகாமில் தங்கி இருந்த நேரத்தில் அவரை தத்தெடுத்து வளர்த்தவர் தான் தன்னை இந்தியாவின் ஒரு அடையாளமாக மாற்ற வேண்டும் என்று கலெக்டராக படிக்க வைத்தவர் என கூறி கண்கலங்கியுள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |