மழைக்காலங்களில் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சுக்கு மல்லி காபி
பொதுவாகவே காலநிலை மாற்றத்தால் அடிக்கடி சிலருக்கு சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே போகும்.
இதனால் நிம்மதியாக சாப்பிடமுடியாது, வேலைப்பார்க்க முடியாது, மூச்சுக் கூட விடமுடியாது, மூக்கை அடைத்துக் கொண்டு பேசக் கூடமுடியாமல் போகும். இந்த பிரச்சினையை திரும்ப வரவிடாமல் தடுக்க ஒரே ஒரு காபி போதும். அதை எப்படி செய்வது தெரியுமா?
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி விதை - 1/4 கப்
மிளகு - 1 தேக்கரண்டி
ஏலக்காய் - 2
சுக்கு - 1 அங்குல துண்டு
பனை வெல்லம் - 1/3 கப்
செய்முறை
வெறும் பாத்திரத்தில் மல்லி விதை, ஏலக்காய், மிளகு என்பவற்றை வாசனை வரும் வரை வறுக்கவும்.
பிறகு சுக்கு தோலை சரண்டி லேசாக நசுக்கி அனைத்தையும் கொரகொரப்பான பொடியாக செய்துக் கொள்ளவேண்டும்.
பின்னர் பனை வெல்லத்தை துருவி தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிக்கட்ட வேண்டும்.
அதன் பின் ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி 1 மேசைக்கரண்டி பொடித்த சுக்கு மல்லி பொடியை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
கொதித்த பிறகு வடிகட்டி பனை வெல்ல கலந்த நீரை கலந்து சூடாக பருக வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |