பல மடங்கு வேகத்தில் எடையை குறைக்கும் மசாலா டீ செய்வது எப்படி?
வேகமாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மசாலா டீ தயாரித்து குடியுங்கள்.
இந்த டீயில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கக் கூடியவை.
வாரத்திற்கு ஒருமுறையோ இருமுறையோ இதனைச் செய்து அருந்தலாம்.
இனி சுவையான மசாலா டீ செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- பால் 1 டம்ளர்
- டீ தூள் 2 டீஸ்பூன்
- வெள்ளைச் சர்க்கரை 2 ஸ்பூன்
- ஏலக்காய் 3 எண்ணம்
- கிராம்பு 2 எண்ணம்
- பட்டை சுண்டு விரல் அளவு
- மிளகு 2 எண்ணம்
- இஞ்சி சுண்டு விரல் அளவு
- தண்ணீர் முக்கால் டம்ளர் அளவு
மசாலா டீ செய்யும் முறை
ஏலக்காய், பட்டை, கிராம்பு, மிளகு ஆகியவற்றை இடி கல்லிலோ, மிக்ஸியிலோ போட்டு நன்கு பொடித்துக் கொள்ளவும்.
இடி கல்லில் சேர்த்து இடிக்கும் போது ஏலக்காயின் விதைகள் நன்கு நொறுங்கும்படி இடித்துக் கொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி இடிகல்லில் போட்டு நைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முக்கால் டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் அதில் டீத்தூளைச் சேர்க்கவும்.
டீத்தூள் நன்குக் கொதித்ததும் ஏலக்காய், பட்டை, கிராம்பு, மிளகு ஆகியவற்றை இடித்த பொடியைச் சேர்த்து மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும்.நறுமணப் பொருட்களைச் சேர்க்கும் முன்பு மற்றொரு அடுப்பில் பாலைக் காய்ச்ச வைக்கவும். பால் பொங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
டீத்தூள் நறுமணக் கலவை பாதியாக வற்றியதும் சர்க்கரை சேர்க்கவும்.
அரை நிமிடம் கழித்து காய்ச்சிய பாலைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். சர்க்கரையின் அளவினைச் சரி பார்க்கவும். இச்சமயத்தில் சர்க்கரை தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டியில் வடினால் சூப்பரான சுவையான டீ தயார்.