10 நிமிடத்தில் மாவே பிசையாமல் பூ போன்ற இடியாப்பம் செய்யலாம்
அனைவருக்குமே பொதுவாக இடியப்பாம் சாப்பிட பிடிக்கும், ஆனால் அதனை செய்வது கொஞ்சம் சிரமம் என்பதால் பலரும் ஒதுக்கி விடுகின்றனர்.
ஆனால் இனிமேல் இந்த கவலை வேண்டாம்.
மாவு பிசையாமல் மெஷின் இல்லாமல் 10 நிமிடத்தில் பூப்போல சாப்பிட உதிரியான இடியாப்பம் செய்யலாம்.
எப்படி முடியும் ? இப்படி தானே யோசிக்கிறீங்க எப்படி செய்வது என்று தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
செய்முறை
அரிசிமாவு அல்லது கடையில் வாங்கிய இடியாப்பமாவு 1 கப் எடுத்துக் கொள்ளுங்கள், அதில் சிறிதளவு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசைக்கு மாவு கரைப்பது போன்று தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அந்த கரைசலை கேக் செய்யும் போது ஐசிங் அழங்காரம் செய்ய பயன்படுத்தும் (icing cone) பொலிதீன் பையையில் ஊற்றிக் கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பில் தோசை கல்லை வைத்து அடுப்பை குறைந்த தனலில் வைத்துக்கொள்ளளுங்கள். தோசைக்கல்லில் லேசாக எண்ணெய் தடவி மாவு ஊற்றி வைத்த icing coneஇன் அடியில் லேசாக வெட்டி தோசை கல்லில் இடியாப்பம் பிழிவது போல பிழிந்து கொள்ளுங்கள்.
அரைநிமிடம் அதனை மூடியொன்றினால் மூடி வேகவைத்து எடுத்தால் சுடசுட மிருதுவான இடியாப்பம் ரெடி.
உடனடியாக இடியாப்பம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும் போது இந்த முறையை கையாள்வது மிகவும் இலகுவானதாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |