ஹோட்டல் ஸ்டைல் சுவையில் சாம்பார் வைக்கணுமா? இப்படி தூள் அரைச்சு வைங்க.. ருசியே தனி
பொதுவாகவே நாம் சமைக்கும் உணவின் சுவைக்காக பல பொருட்களைச் சேர்த்துக் கொள்ளுவோம்.
அதில் சில இயற்கையான ஆரோக்கியமான பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். காய்கறிகளில் மட்டுமல்லாமல் சில மசாலாப் பொருட்களிலும் தரமான, சுவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு பாரம்பரிய முறையில் உணவின் சுவையை இன்னும் அதிகரிக்க வீட்டிலேயே சாம்பார்தூள் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிவப்பு மிளகாய் : 1 கிலோ
கொத்தமல்லி : 1 1/2 கிலோ
பச்சரிசி : 100 கிராம்
கடலைப்பருப்பு : 200 கிராம்
வெந்தயம் : 50 கிராம்
மிளகு : 50 கிராம்
சீரகம் : 100 கிராம்
பெருங்காயம் : சிறிய துண்டு
நல்லெண்ணெய் : தேவையான அளவு
விரலி மஞ்சள் : 100 கிராம்
கறிவேப்பிலை : கைப்பிடி அளவு
செய்முறை
மசாலாப் பொருட்கள் அனைத்தையும் வெயிலில் நான்கு நாட்களுக்கு நன்றாக காய வைக்கவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கொத்தமல்லியை நன்றாக வறுத்து, தனியே ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும். பின் கடாயில் எண்ணெய் விடாமல் வெந்தயத்தை வறுக்கவும்.
ஒரிரு நிமிடங்கள் கழித்து பச்சரிசி, கடலைப்பருப்பு, குருமிளகு பெருங்காயம், சீரகத்தை சேர்த்து நன்றாக வறுக்கவும். பின், கறிவேப்பிலையை சேர்த்து வறுக்கவும்.
அடுப்பை குறைவான தணலில் வைக்கவும். தொடர்ந்து, விரலி மஞ்சளையும் சேர்த்து நன்றாக வறுத்த பின்னர் தட்டில் கொட்டி கொட்டி ஆற வைக்கவும்.
இறுதியாக, கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சிவப்பு மிளகாயை நன்றாக வறுக்கவும்.இதையும் தட்டில் கொட்டி ஆற வைத்து, மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளலாம்.
இப்போது ஆரோக்கியமான, மணமும் சாம்பார்த்தூள் தயார்.