இட்லி, தோசைக்கு அட்டகாசமான வேர்க்கடலை கிரேவி... எப்படி செய்றதுனு தெரியுமா?
இட்லி மற்றும் தோசைக்கு சுவையான வேர்க்கடலை கிரேவி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பெரும்பாலான இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டு மக்கள் தங்களது உணவில் இட்லி தோசையை தான் பெரும்பாலும் காலை உணவாக எடுத்துக் கொள்கின்றனர்.
இவ்வாறான இட்லி தோசைக்கு சில வகையான சட்னி மற்றும் சாம்பார் இவற்றினை செய்து சாப்பிட்டு வரும் நிலையில், அட்டகாசமான வேர்க்கடலை கிரேவி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
வேர்க்கடலை கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை - 1 கப் (வறுத்தது)
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லித் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
முந்திரி - 7
ஏலக்காய் - 1
பூண்டு - 5 பல்
தக்காளி - 2
தேங்காய் - 1/4 கப்
பெரிய வெங்காயம் - 1
உப்பு - சுவை கேற்ப
கொத்தமல்லி, கருவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வேர்க்கடலை கிரேவி செய்வதற்கு முதலில், வேர்க்கடலையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைத்துக்கொள்ளவும்.
பின்பு கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும், அதனுடன் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளி தேங்காங் முந்திரி இவற்றினை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.
மற்றொரு புறம் மிக்ஸி ஜாரில், மிளகாய் மற்றும் மல்லித்தூள், கரம் மசாலா மற்றும் வதக்கி வைத்திருக்கும் பொருளையும் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கடுகு, உளுந்தம் பருப்பு, சோம்பு, சீரகம் ஆகியவற்றையும், இதனுடன் பச்சை மிளகாய், கருவேப்பிலை, ஏலக்காய், பூண்டு இவற்றினை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.
பின்பு பொடியாக வெட்டி வைத்திருக்கும் வெங்காயத்தையும் போட்டு அதற்கேற்ப உப்பு சேர்த்து வதக்கிக்கொண்டு, அதனுடன் வேக வைத்த வேர்க்கடலை மற்றும் அரைத்து வைத்த மசாலா பேஸ்ட் இவற்றினை சேர்த்து நன்றாக கிண்டி விடவும்.
பிறகு இதனை ஒரு இரண்டு நிமிடம் மூடி வைத்து வேக வையுங்கள். இப்போது அதன் மேல் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி இறக்கினால் அட்டகாசமான சுவையில் வேர்க்கடலை கிரேவி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPPCHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |