மீன் குழம்பு இப்படியும் செய்யலாமா? ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க
பொதுவாகவே விதவிதமாக சமைத்து சாப்பிடுவது அனைவருக்குமே பிடித்த விடயமாக இருக்கும். அதிலும் அசைவ உணவுகளை சமைப்பது என்பதே ஒரு தனி கலை.
சில உணவுகளை சொல்லும் போதே நாவில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும். அப்படி ஒரு உணவு தான் மீன் குழம்பு.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் மசாலா மீன் குழம்பு அல்டிமேட் சுவையில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மீன் – அரை கிலோ கிராம்
புளி – தேவையான அளவு
மிளகாய் தூள் – 3 தே.கரண்டி
சீரகத்தூள் – 4 தே.கரண்டி
சின்ன வெங்காயம் – தேவையான அளவு
மஞ்சள் தூள் – அரை தே.கரண்டி
மல்லி தூள் – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – இரண்டு குழிக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 தே.கரண்டி
கடுகு – 1 தே.கரண்டி
தேங்காய் – அரைத்தது தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் 2 மேசைக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து அதில் கடுகு 1தே.கரண்டி, சிவப்பு மிளகாய் 3, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் சின்ன வெங்காயம் தேவையான அளவு சேர்த்து வதக்க வேண்டும்
வெங்காயம் பொன்நிறமாக வதங்கிய பின்னர் அதில் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின் புளியை எடுத்து புளிக்கரைசலை தயார் செய்து கொள்ள வேண்டும்.
அதில் சீரகத்தூள் 4 டேபிள் ஸ்பூன், மிளகாய் தூள் 3 டேபிள் ஸ்பூன், மல்லி தூள் 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் அரை டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கரைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் 1 குழிக்கரண்டி அளவுக்கு நல்லெண்ணெய் சேர்த்து அந்த கலவையை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
குழம்பு நன்றாக கொதித்த பின்னர் கழுவி வைத்திருக்கும் மீனை சேர்த்து சிறிது நேரம் கழித்து அதில் 1 குழிக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
பின்னர் அதில் அரைத்து வைத்த தேங்காயை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கினால் மணமணக்கும் மசாலா மீன் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPPCHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |