வீட்டில் தயிர் மிஞ்சிவிட்டதா? அதை வைத்து சுவையான பன்னீர் செய்யலாம்....!
மீதம் அடைந்த தயிரை வைத்து மிக எளிமையாக பன்னீர் தயாரிக்க முடியும்.
வீட்டிலேயே புத்தம் புதிய பன்னீர் தயாரிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
செய்முறை
தயிரில் இருந்து பன்னீர் தயார் செய்வதற்கு நல்ல ஆழம் கொண்ட பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொள்ளவும்.
அதில் 3 கப் பால் சேர்க்கவும்.

அதை மிதமான தீயில் சூடுபடுத்தி, கொதி நிலைக்கு கொண்டு வர வேண்டும். பின்னர், வீட்டில் மீதமடைந்த 1 ½ கப் தயிர் எடுத்து நன்றாக கலக்கி விடவும்.
இதற்கிடையே, தீயை மிக மெதுவாக குறைத்து விட வேண்டும். இப்போது பாலுடன் தயிர் சேர்த்து கிளறி விடவும்.
சிறிது நேரத்தில் பால் நன்றாக உறைந்து வருவதையும், அதில் இருந்து தண்ணீர் பிரிவதையும் நீங்கள் பார்க்க முடியும்.
வடித்து எடுக்கவும்
அடுத்ததாக தூய்மையான கடாய் ஒன்றை எடுத்துக் கொள்ளவும்.
அதன் மீது வெள்ளை நிற துணி ஒன்றை கட்டி வைக்கவும்.
இப்போது காய்ச்சி வைத்த பால் தயிர் கலவையை இதன் மீது ஊற்றவும்.

இதன் மூலமாக கலவையில் உள்ள தேவையற்ற தண்ணீரை நீக்கிவிட முடியும்.
சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரையில் இந்தக் கலவையை ஃபிரிட்ஜில் வைத்து எடுக்கவும்.
துணியை நீக்கி விட்டு பார்த்தால், உங்களுக்கான பன்னீர் தயார் நிலையில் இருக்கும். இதை உங்களுக்கு விருப்பமான வடிவங்களில் வெட்டி வைத்துக் கொண்டு, தேவையான சமையங்களில் எடுத்து சமைத்துக் கொள்ளலாம்.
முக்கிய குறிப்பு
நீங்கள் பன்னீர் தயாரிப்பதற்காக எடுத்துக் கொள்ளும் தயிரை நன்றாக கலக்கி வைக்க வேண்டும்.
ஒருவேளை நீங்கள் முறையாக கலக்கவில்லை என்றால் பன்னீர் கிடைக்காது.
நன்றாக கலக்கிய பிறகே தயிரை சூடான பாலுடன் சேர்க்க வேண்டும்.