குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கீரை பூரி! வெறும் 10 நிமிடத்தில் தயார்
சுவையான மற்றும் ஆரோக்கியமான பாலக்கீரையில் பூரி செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பாலக்கீரை
உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமாக இருக்கும் உணவுகளில் கீரை முதன்மையாக இருக்கின்றது. தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது மட்டுமின்றி, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்ததாக இருக்கும்.
குழந்தைகள் கீரை சாப்பிடுவதற்கு முகம் சுழிக்கும் நிலையில், சற்று வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
கீரையில் பூரி செய்ய முடியுமா? நிச்சயமாக முடியும் என்பதை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 2 கப்
பச்சை மிளகாய் - 2
பாலக்கீரை - 1 கட்டு
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கீரையை தண்ணீரில் சுத்தம் செய்து, பாத்திரம் ஒன்றில் கீரையை போட்டு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
கீரை வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, மிக்ஸி ஜாரில் கீரை மட்டும் போன்று நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்பு அகலமான பாத்திரம் ஒன்றில் பூரிக்கு தேவையான கோதுமை மாவு, உப்பு சேர்த்து கலக்கி, இந்த கீரை விழுதையும் சேர்த்து பிசையவும்.
பின்பு சிறு சிறு உருண்டையாக உருட்டி சப்பாத்திக் கல்லில் போட்டு சப்பாத்தியாகவும், எண்ணெய்யில் போட்டு பூரியாகவும் போட்டு எடுக்கவும்.
இதனை குழந்தைகள் ஒதுக்கி வைக்காமல் விரும்பி சாப்பிடுவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |