முருங்கைக் கீரையை இப்படி பொரியல் செய்து பாருங்க... மீதமே இருக்காதாம்
முருங்கைக் கீரை பொரியல் ஊரே மணக்கும் வகையில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முருங்கைக் கீரையில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த பயன் அளிப்பதுடன், ரத்தத்தின் அளவையும் அதிகரிக்கின்றது.
இரும்புச்சத்து நிறைந்த கீரையினை அனைத்து வயதினரும் எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் முருங்கைக் கீரையை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.
தற்போது முருங்கைக் கீரையில் வித்தியாசமான சுவையில் பொரியல் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் - 5
கடுகு - 1 டீஸ்பூன்
பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
கருவேப்பிலை - ஒரு கொத்து
பெரிய வெங்காயம் - 2
பாசிப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் (ஊற வைத்தது)
உப்பு
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
செய்முறை
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் வரமிளகாய், கடுகு சேர்த்து தாளித்து, பூண்டு, பச்சை மிளகாய், கருவேப்பிலை, பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறிய பின்பு ஊறவைத்த பாசிப்பருப்பினை அதில் சேர்த்து கிளற வேண்டும். பின்பு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயத் தூள் இவற்றினை சேர்த்து நன்கு கிளறவும்.
தொடர்ந்து இந்த கலவையில், கழுவி வைத்திருக்கும் முருங்கை இலைகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அவை நன்கு வேகும் வரை தொடர்ந்து வதக்கவும்.
விருப்பம் இருந்தால் கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கினால், கிராமத்து ஸ்டைல் முருங்கைக்கீரை பொரியல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |