எத்தனை நாட்களுக்கு ஒருமுறை பெட்ஷீட்டை துவைக்க வேண்டும்? இதை மட்டும் செய்யக்கூடாது
நாம் அன்றாடம் தூங்குவதற்கு பயன்படுத்தும் போர்வை, மெத்தை விரிப்பு இவற்றினை எத்தனை நாட்கள் இடைவெளியில் துவைக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடல்நலம் மற்றும் சுகாதாரத்தை பராமரிக்க நீங்கள் பயன்படுத்தும் போர்வைகளை அடிக்கடி துவைப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
படுக்கை விரிப்புகளை ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும். இருப்பினும், செல்லப்பிராணிகளால் ஒவ்வாமை, அலர்ஜி உள்ளவர்கள், அதிக வியர்வை வரும் நபர்கள் என்றால் வாரம் ஒருமுறை கட்டாயம் துவைப்பது மிகவும் நல்லதாகும்.
image: Getty
முடியில் உள்ள எண்ணெய், காற்று தூசி, அழுக்கு நுண்ணுயிரிகள் விரைவில் சேரும் என்பதால் போர்வையை அடிக்கடி சுத்தமாக வைத்துக் கொண்டால் ஆரோக்கியத்திற்கும், நல்ல உறக்கத்திற்கும் உதவுகின்றது.
அடிக்கடி துவைக்கும் போது, வியர்வை, இறந்த சரும செல்கள், தூசிப் பூச்சிகள், பாட்டீரியாக்கள் மற்றும் பிற ஒவ்வாமையை நீக்குகின்றது.
நாம் சரியாக துவைக்காவிட்டால் சுவாச பிரச்சனை, ஒவ்வாமை, தோல் எரிச்சல், முகப்பரு பிரச்சனையை ஏற்படுத்தும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
பெட்ஷீட் பராமரிப்பு டிப்ஸ்
போர்வை, மெத்தை விரிப்பு இவற்றினை வெதுவெதுப்பான நீரில் போட்டு ஊற வைத்து துவைப்பது நல்லதாகும். ஏனெனில் சுடுதண்ணீரில் போடுவதால் பாக்டீரியாவை அழிக்க முடியுமாம்.
அதிகமான சேப்பு மற்றும் ஆயில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில் காலப்போக்கில் பெட்ஷீட் உறிஞ்சும் தன்மையைக் குறைக்குமாம்.
துவைத்த பெட்ஷீட்டை வெயிலில் போட்டு நன்றாக உலர்த்தி எடுப்பது அவசியமாகும். ஏனெனில் பூச்சு மற்றும் பூஞ்சை காளான் வளர்ச்சியை தடுக்க முடியும். ஆதலால் முடிந்தவரை வெயிலில் உலர்த்தி எடுப்பது மிகவும் சிறப்பாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |