கீரையில் இப்படி சட்னி வைத்து சாப்பிடுங்க... முகம் பளபளவென மாறுமாம்
முருங்கை கீரையை வைத்து சுவையான சட்னி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக கீரைகளில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றது. அதிலும் முருங்கை கீரையில் அதிக சத்துக்கள் காணப்படுவதுடன், குழந்தைகள், கர்ப்பிணிகள், பெரியவர்கள் அனைவருக்கும் சிறந்ததாகவும் இருக்கின்றது.
முருங்கை கீரையை பொரியல், கூட்டு என வைத்து சாப்பிட்டிருக்கும் நிலையில் சட்னி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
முருங்கை கீரை - 1 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 4
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
துருவிய இஞ்சி - 1 ஸ்பூன்
நறுக்கிய பூண்டு - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
புளி விழுது (அல்லது புதிய புளி) - 1 ஸ்பூன்
வெல்லம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
தண்ணீர் - 1/4 கப்

செய்முறை
முதலில் கீரையை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும். கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய், கடுகு சீரகம் சேர்த்து தாளிக்கவும்
பின்பு நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு இவற்றினை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
தொடர்ந்து முருங்கை கீரையை கடாயில் சேர்த்து 3 நிமிடம் நன்றாக வதக்க வேண்டும். கீரை சற்று சுருண்ட பின்பு துருவிய தேங்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.
வதக்கி வைத்துள்ள கலவை நன்றாக ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் சேர்த்து புளி மற்றும் வெல்லம், தேவையான உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த சட்னியை எண்ணெய் சேர்த்து தாளித்து இட்லி, தோசைக்கு பரிமாறினால் அட்டகாசமான கீரை சட்னி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |