மீந்து போன இட்லியை குப்பையில் போடுறீங்களா? இந்த மாதிரி மசாலா இட்லி செய்து சாப்பிடுங்க
மீந்து போன இட்லியை வைத்து மசாலா இட்லி அட்டகாசமான சுவையில் எவ்வாறு செய்து அசத்தலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.
இந்திய மாநிலம் தமிழகத்தில் காலை மற்றும் இரவு உணவு என்றால் இட்லியாக தான் இருக்கும். இட்லி பிரதான உணவாக இருந்து வருகின்றது.
ஆவியில் வேக வைத்து சாப்பிடும் இட்லி செரிமானத்தை மேம்படுத்துவதுடன், இரவில் சுகமான தூக்கத்தையும் கொடுக்கின்றது. ஆனால் சில நேரங்களில் இட்லி மீதமாகவும் வாய்ப்புள்ளது.
அத்தருணத்தில் இட்லியை மசாலா இட்லியாக செய்து குழந்தைகளுக்கு கொடுத்து நன்றாக விரும்பி சாப்பிடுவார்கள். தற்போது மீந்து போன இட்லியை வைத்து மசாலா இட்லி செய்வதைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
இட்லி - 5 -
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் - 1/4 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1/2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 1/2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பழுத்த தக்காளி - 2
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
இட்லி போடி - 2 ஸ்பூன்
பாவ் பாஜி மசாலா தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - அலங்கரிக்க
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
சர்க்கரை - ஒரு சிட்டிகை
நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை
மீந்துபோன இட்லியை சதுர துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். கடாய் ஒன்றில் எண்ணெய் சேர்த்து அதில் சீரகம் போட்டு தாளிக்கவும்.
பின்பு நறுக்கிய வெங்காயத்தினை சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதன் பச்சை வாசனை போன பின்பு நறுக்கிய தக்காளி மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைந்ததும் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பாவ் பாஜி மசாலா இவற்றினை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். மசாலா வாசனை சென்றதும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
பின்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். கடைசியாக இட்லி துண்டுகளை சேர்த்து மசாலா அதன் மீது படியும்படி மெதுவாக கலக்கவும்.
பின்னர் இட்லி பொடி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறவும். கடைசியாக கொத்தமல்லி இலையை தூவி அடுப்பை அணைத்தால் சுவையான மசாலா இட்லி ரெடி.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |