கேரளா ஸ்டைலில் தேங்காய் பால் மீன் குழம்பு - எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?
அப்போ தேங்காய் பாலின் நறுமணத்தோடு, வாயில் கரையும் கேரளா ஸ்டைல் தேங்காய் பால் மீன் குழம்பு எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

இதை செய்வது சுலபம். இதற்கு தேவையான பொருட்களும் ாம் வழக்கம் போல பய்னபடுத்தும் பொருட்கள் தான்.
இந்த ரெசிபி செய்ய சில மணி நேரங்களே போதும். இதை செய்யும் முறை பற்றி விளக்கமாக பதிவில் கூறப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்
- வஞ்சிரம் மீன் - அரை கிலோ
- தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- இஞ்சி - 2 இன்ச்
- நறுக்கிய வெங்காயம் - 2
- பச்சை மிளகாய் - 3
- பூண்டு - 6 பற்க
- நறுக்கிய தக்காளி - 2
- உப்பு - சுவைக்கேற்ப
- மஞ்சள் - 1 டீஸ்பூன்
- மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
- பிரஷ் தேங்காய் பால் - அரை லிட்டர்
- சிறிய எலுமிச்சை - 1
- வினிகர் - 1 டீஸ்பூன்

செய்முறை
மீன் குழம்பு தயாரிக்க தேங்காய் எண்ணெயில் இஞ்சி, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்னர் தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
பின்னர் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு மீன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும்.
பின்னர் தீயை குறைத்து தேங்காய் பால், எலுமிச்சை சாறு, வினிகர் சேர்த்து 5 நிமிடம் மெதுவாக கொதிக்கவிடவும்.
மீன் உடையாமல் பாத்திரத்தை லேசாக சுழற்றி கலக்கவும். சுவையான கேரளா ஸ்டைல் மீன் கறி தயார்.