கொள்ளையர்களின் இராச்சியம் தற்போது Smart city- எங்குள்ளது தெரியுமா?
28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள், சுமார் 780 மாவட்டங்களைக் கொண்ட மிகப்பெரிய நிர்வாக அமைப்பு கொண்ட இந்தியாவில் கொள்ளையர்களின் கூட்டமே வாழ்ந்த நகரம் பற்றி கேள்விபட்டிருக்க வாய்ப்பு இல்லை.
ஆனால் கொள்ளையர்கள் அதிகமான வாழ்ந்த நகரம் ஒன்று இந்தியாவில் இருந்துள்ளது.
இந்த நகரம் தற்போது நவீனமயமாக்கப்பட்டுள்ளது. பூர்ணியா என அழைக்கப்படும் குறித்தந நகரமானது, இந்தியாவின் முதல் மாவட்டமாக உருவாகியுள்ளது.
பீகாரில் உள்ள பூர்ணியா நகரத்தில் அந்த காலக்கட்டத்தில், கொள்ளையர்கள், கள்வர்கள், நெடுஞ்சாலை வீரர்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.
அந்த வகையில், பூர்ணியா நகரம் எப்படி இந்தியாவில் நவீனமயமாக்கப்பட்டது என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவின் முதல் மாவட்டம்
கடந்த 1765ஆம் வெளிநாட்டவர்கள் இந்தியாவை ஆட்சி செய்த பொழுது பூர்ணியா நகரம் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டு, பார்க்கவே பயங்கரமாக இருந்துள்ளது. ஆனால் குற்றங்களும் அதிகமான வர்த்தகர்கள் வந்து செல்லும் இடமாக இருந்த காரணத்தினால் கிழக்கிந்திய நிறுவனம் ஒன்று தன்னுடைய அமைப்பை குறித்த நகரில் வைத்திருந்தது.
அதன் பின்னர், கடந்த பிப்ரவரி 10, 1770 அன்றைய தினம் பூர்ணியா அதிகாரப்பூர்வமாக முதல் மாவட்டமாக அறிவிக்கப்பட்டள்ளது. குற்றங்களால் நிறைந்திருந்த பூர்ணியா நகரத்திற்கு பொதுமக்கள் செல்ல பயம் கொண்டார்கள். வெளிநாட்டவர்கள் அவர்களை அடக்கி ஒழுக்கமான நகரமாக மாற்ற மிகவும் கடினப்பட்டது.

நவீன மயமாக்கப்பட்டது எப்படி?
கொள்ளையர்களின் குகையாக இருந்த நகரம் ஸ்மார்ட் சிட்டியாக மாறிய கதை பெரிதாக யாருக்கும் தெரியாது. வலுவான வளர்ச்சி பாதையில் செல்ல துவங்கிய பின்னர் நாட்டின் “முதல் மாவட்டம்” என மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
இன்று அந்த நகரில் நவீன பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், மேம்பட்ட அரசு மருத்துவமனைகள், பரந்த சாலைகள், பொது பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத்தளங்கள் நிறைந்துள்ளன.

இங்கு இல்லாத வசதிகளே இல்லை. கொள்ளையர்கள் ஆட்சி செய்த பொழுது பயந்து சென்ற மக்கள் தற்போது தங்களின் தேவைகளுக்காக தைரியமாக நகருக்கு செல்கிறார்கள். இப்படியொரு முன்னேற்றம் பொதுமக்களுக்கு ஆச்சியர்த்தை ஏற்படுத்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |