ஹோட்டல் ஸ்டைல் சாஃப்டா பொங்கல் செய்யணுமா? முக்கியமான டிப்ஸ் இதுதான்
ஹோட்டல் ஸ்டைலில் மிருதுவான வெண்பொங்கல் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வீட்டில் செய்யும் பொங்கல் சிறிது நேரத்தில் இறுகிப்போய் கட்டியாகிவிடும். ஆனால் ஹோட்டலில் அவ்வாறு கட்டியாகாமலும், இறுகாமலும் நன்றாக இருக்கும்.
ஆதலால் பலருக்கும் ஹோட்டல் ஸ்டைலில் பொங்கல் செய்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். அவ்வாறு பொங்கல் செய்ததும் இறுகாமல், ஹோட்டல் ஸ்டைல் மிருதுவான பொங்கலுக்கு என்ன செய்யலாம் என்ற சில டிப்ஸ்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

ஹோட்டல் ஸ்டைல் பொங்கல் டிப்ஸ்
பொங்கல் செய்வதற்கு நீங்கள் பயன்படுத்தும் பச்சரிசியை அரை மணி நேரத்திற்கு முன்பு ஊற வைத்துக் கொள்ளவும்.
ஊற வைத்த அரிசியினை மிக்ஸி ஜாரில் பல்ஸ் மோடில் போட்டு கொரகொரப்பான குருணை பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
அரிசி, பருப்பின் அளவு என்பது மிகவும் முக்கியம் ஆகும். ஒரு கப் அரிசிக்கு, அரை கப்பிற்கு சற்று அதிகமாக பருப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். பருப்பையும் அரை மணி நேரம் ஊற வைத்து சேர்க்கவும்.

ஒரு கப் அரிசி மற்றும் அரை கப் பருப்பிற்கு, 6 ்கப் தண்ணீர் சேர்த்து 4 விசில் போட்டு இறக்குவது மிகவும் முக்கியம்.
தாளிக்கும் போது எண்ணெய், நெய் இரண்டும் சேர்க்காமல், நெய் மட்டும் சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும்.
பொங்கலை தாளித்து முடித்த பின்பு 300 முதல் 400 மில்லி அளவு காய்ச்சாத பாக்கெட் பாலை ஊற்றி கலந்துவிட்டால், பொங்கல் நல்ல மிருதுவாக இருக்குமாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |