உடல் எடையை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இஞ்சியை இப்படி சாப்பிடுங்க
இந்திய மக்களின் உணவுகளில் அதிகமாக இடம்பெற்றுள்ளதும், அதிக மருத்துவகுணம் உள்ள பொருள் தான் இஞ்சி. இவற்றினை நாம் உணவில் அதிகம் பயன்படுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
இஞ்சியை ஜீரண பிரச்சினை, சுவாச பிரச்சினை, சளி, இருமல் இவற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர தீர்வு கொடுக்கின்றது. ஆனால் இவற்றினை பலரும் அதிகமாக எடுத்துக்கொள்வதில்லை . காரணம் இதில் இருக்கும் கார தன்மையே.
இங்கு இஞ்சி மிட்டாய் எவ்வாறு தயார் செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
இஞ்சி - 100 கிராம்
வெல்லம் - 400 கிராம் பொடித்தது
கருப்பு உப்பு - அரை டீஸ் ஸ்பூன்
மஞ்சள் - அரை டீஸ் ஸ்பூன்
மிளகு தூள் - அரை டீஸ் ஸ்பூன்
நெய் - அரை ஸ்பூன்
செய்முறை
முதலில் இஞ்சியை நன்றாக தோலை நீக்கி சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் போட்டு நன்றாக மை போன்று அரைத்துக் கொள்ளவும்.
பின்பு மிதமான தீயில் வைத்து வானலியை வைத்து அதில் குறித்த பேஸ்டை போட்டு ஒரு நிமிடம் சூடு ஏறும்வரை சற்று வதக்கிகொள்ளவும். பின்பு இதனுடன் வெல்லத்தூளை சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
இந்த கலவை சற்று கட்டியான பதத்திற்கு வந்த பின்பு, இதில் உப்பு, மிளகுதூள், மஞ்சள் தூள், நெய் இவற்றினை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
பின்பு அடுப்பிலிருந்து இறக்கி, பட்டர் பேப்பர் ஒன்றினை விரித்து அதன் மேல், குறித்த கலவையை ஸ்பூனில் கொஞ்சம் கொஞசமாக ஊற்றி பின்பு காய்ந்ததும் எடுத்துவிடவும்.
மேலே சர்க்கரையை சிறிது பொடித்து தூவிவிட்டால், சுவையான இஞ்சி மிட்டாய் தயார். இவை குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை நன்கு பெறலாம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெல்லத்தின் அளவை பாதியாக குறைத்துக்கொண்டு சாப்பிடலாம்.