ABC Juice பக்கவிளைவுகள்: இந்த நோயாளிகள் கண்டிப்பா சாப்பிடக்கூடாது
இன்று பலரும் ABC ஜூஸ்-க்கு அடிமையாகிவிட்டனர், இதை தினமும் வெறும் வயிற்றில் குடித்தால் சருமம் பொலிவு பெறும், உடலுக்கு நல்லது என டிரெண்டாகி கொண்டிருக்கிறது ABC ஜூஸ்.
விட்டமின்கள் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் கொண்டு தயாரிக்கப்படும் பானம் ABC ஜூஸ்.
இதிலுள்ள நீர்ச்சத்து சருமம் வறண்டு போவதை தடுத்து, பொலிவுடன் இருக்கச் செய்கிறது, முகத்தை பளபளப்பாக்குகிறது, தலைமுடியை நீண்டு வளரச்செய்கிறது, உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது.
ஆனால் பல நன்மைகள் இருந்தாலும் இதை தினந்தோறும் எடுத்துக்கொள்வது பக்கவிளைவுகளை உண்டாக்குகிறது.
அவை என்னவென்று பார்க்கலாம்.
தொடர்ந்து உட்கொள்ளும் போத கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் என கூறப்படுகிறது, இதில் பீட்டா கரோட்டின் நிறைந்திருப்பதல் கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தும், கல்லீரல் நோயாளிகளுக்கு இது உகந்தது அல்ல.
இதில் ஆக்சலேட் அதிகம் இருப்பதால் தொடர்ந்து குடிப்பது சிறுநீரக கற்கள் உருவாவதை அதிகரிக்கிறது, பீட்ரூட் சாறு தொடர்ந்து எடுத்துக்கொள்வதால் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படலாம்.
வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளும் போது வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரலாம், வீக்கம், வாயுத்தொல்லை மற்றும் வயிற்றுவலியை உண்டாக்கலாம்.
தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டால் ரத்த சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கத்தை உண்டாக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல, மேலும் இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்களுக்கும் இதன் பாதிப்பு உண்டு.
ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்களும் ABC ஜூஸ் தவிர்ப்பது நல்லது, சிலருக்கு தடிப்புகள் அல்லது வீக்கத்தை உண்டாக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |