Egg Pakora: மொறுமொறு முட்டை பக்கோடா எப்படி செய்யலாம்?
ரோட்டோர கடைகளில் விற்கப்படும் முட்டை பக்கோடா எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- முட்டை - 3
- கடலை மாவு - 1 கப்
- அரிசி மாவு - 1/4 கப்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
- சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- கொத்தமல்லி தழை - கொஞ்சம்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை
முதலில் முட்டையை வேக வைத்து உரித்து எடுத்துக் கொள்ளவும். பின்பு நீள, குறுக்கு வாக்கில் 4 பகுதியாக வெட்டிக் கொள்ளவும்.
அகலமான பாத்திரத்தினை எடுத்து அதில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, பெருங்காயத் தூள், பொடியாக நறுக்கின கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, தேவையான அளவு உப்பு அனைத்தையும் மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கெட்டியான பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். தண்ணியாக கரைத்தால் பக்கோடா போடுவது சிரமமாகிவிடும்.
பின்பு வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை எடுத்து ஒவ்வொன்றாக பஜ்ஜி மாவு கலவையில் பிரட்டி, சூடான எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.
இதனை தக்காளி, புதினா சட்னியுடன் சேர்த்து சாப்பிடும் போது சுவை அதிகமாகவே இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
