கோடை வெயிலில் இந்த உணவை எடுத்துக்காதீங்க... உடலுக்கு தீங்கு ஏற்படுமாம்
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், இந்த நேரத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கோடை காலத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் மிகவும் முக்கியமாகும். வெயிலில் இருந்து தப்பிக்க சில உணவுகளையும், பானங்களையும் எடுத்துக் கொள்கின்றோம்.
கோடைகாலத்தில் நாம் வயிற்றுக்கு ஏற்றுக்கொள்ளாத உணவுகளை சாப்பிடும்போது அது நமது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
கோடை காலத்தில் அதிகளவு காபி, டீ இவற்றினை குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இவை நீர்ச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும்.
பொதுவாக உலர் பழங்கள் உடம்பிற்கு ஆரோக்கியத்தை கொடுத்தாலும், கோடை காலத்தில் இவற்றினை அதிகமாக சாப்பிடக்கூடாது. ஏனெனில் உடலில் வெப்பம் அதிகரிக்கிறது.
கோடை காலத்தில் அதிகப்படியான அசைவம் சாப்பிடுவது உடம்பிற்கு கேடு விளைவிக்கின்றது. குழம்பு மீன், சிவப்பு இறைச்சி, தந்தூரி சிக்கன், கடல் உணவுகளை சாப்பிட விரும்பினால், மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம்.
அதிக கலோரி மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கவும். ஏனெனில் இவை உடலையும், செரிமானத்தையும் பாதிக்கின்றது.
சாப்பிட வேண்டிய உணவுகள்
வைட்டமின் சி சத்து நிறைந்த தக்காளியை எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும். இவை நாள்பட்ட நோய்களை சரிசெய்வதுடன், புற்றுநோயை தடுக்கவும் உதவுகின்றது. கோடை காலத்தில் சிறந்த உணவாக இருக்கின்றது.
நீர்ச்சத்து அதிகம் கொண்ட பழங்களில் ஒன்று தான் தர்பூசணி. இதில் லைகோபீன் சூரியனின் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கின்றது.
எலுமிச்சை சாறை கோடை காலத்தில் எடுத்துக் கொள்வது புத்துணர்ச்சியை அளிப்பதுடன், ஒரு கிளாஸ் எலுமிச்சை ஜுஸ் உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்கும்.
நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காயில் ஊட்டச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது. இதில் அதிகப்படியான நீர் உள்ளதால் செரிமான மண்டலத்தை சீராக்குகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
