5 நிமிடத்தில் சுவையான கோல்டு காபி - வீட்டிலேயே செய்வது எப்படி?
காலையில் எழுந்தவுடன் அனைவரும் சுறுசுறுப்பாக உடலை வைத்துக்கொள்ள காபி அல்லது டீ-யை பருகுவார்கள். அதிலும் காபி என்றால், காபியில் பல வகை உண்டு. பில்டர் காபி, இன்ஸ்டன்ட் காபி, சுக்கு மல்லி காபி, கும்பகோணம் டிகிரி காபி போன்ற வகைகளை நாம் வீட்டிலேயே செய்திருப்போம்.
இதுமட்டுமின்றி எஸ்பிரெஸ்ஸோ, பிராப்பிசீனோ, கேப்பசீனோ, கோல்ட் காபி என பல வகையான காபிகளை சுவைக்க நாம் காபிகளுக்கென்றே ப்ரத்தேயமாக உள்ள சில ஷாப்களுக்கு தான் செல்வோம்.
அந்த வகையில், ரொம்ப காஸ்ட்லியான கோல்ட் காபியை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காய்த்த பால் 1/4லிட்டர்
காபிதூள் ஸ்பூன் 1
சர்க்கரை 5 ஸ்பூன்
சாக்கோ சிரப் 2 ஸ்பூன்
தண்ணீர் தேவையானஅளவு
ஐஸ்கட்டிகள் 5 சாக்லேட் துண்டுகள் 5

செய்முறை விளக்கம்
முதலில் 1 ஸ்பூன் காபிதூள் எடுத்து அதனை 2 ஸ்பூன் தண்ணிரில் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவேண்டும்.
அடுத்ததாக, 5 ஐஸ்கட்டிகள், 5 ஸ்பூன் சக்கரை, 2 ஸ்பூன் சாக்கோ சிரப் எடுத்துக் கொள்ளவேண்டும். 1/4 லிட்டர் காய்த்த பாலில் ஐஸ்கட்டிகளை சேர்க்கவும்.
மிக்ஸி ஜாரில் அந்த பாலை ஊற்றவும். அதன் பிறகு பால் ஊற்றிய பிறகு கலக்கி வைத்துள்ள சக்கரை, சாக்கோ சிரப் காபிதூள் அனைத்தையும் மிக்சி ஜாரில் ஒன்றாக சேர்க்கவும்.
தொடர்ந்து, சர்க்கரை நன்றாக கரையும் வரை அரைக்கவும். அரைத்த பின் ஓரங்களில் நுரை கூடி வருவதை பார்க்கலாம்.
கடைசியாக ஒரு கண்ணாடி கிளாசின் ஓரங்களில் கொஞ்சம் சாக்கோ சிரப் ஊற்றி அரைத்த பாலை ஊற்றி, சிறிய சில சாக்லேட் துண்டுகளை மேலே தூவினால் சுவையான கோல்ட் காபி ரெடி!