சப்பாத்தி softa வேணுமா ? அப்ப இதுபோல செய்ங்க
பொதுவாக அநேகமான வீடுகளில் காலை அல்லது மாலை வேளைகளில் அதிகமாக செய்யக்கூடிய உணவு தான் சப்பாத்தி.
இவ்வாறு செய்யும் சப்பாத்தியின் ரெசிபி இலகுவாக இருந்தாலும் அந்த பதத்தை எடுப்பதற்கு மாவை சரியாக பிசைவது தான் சவாலாக இருக்கும்.
சப்பாத்தி மென்மையாக இல்லாவிட்டால் அதனை சாப்பிட முடியாமல் போய் விடும்.
அந்த வகையில் இத்தனை அம்சங்கள் பொருந்திய சப்பாத்திக்கு எப்படி மென்மையாக மா பிசைவது என்பது தொடர்பில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- மா - தேவையானளவு
- தண்ணீர் - தேவைக்கேற்ப
- சீனி - சிறிதளவு
செய்முறை
1. முதலில் ஒரு பவுலில் மாவை போட்டு பிசைந்து கொள்ள வேண்டும்.
2. பின்னர் கார்டன் துணியை நனைத்து அந்த மாவிற்கு மேல் போட்டு கொள்ளவும். ( மாவை கவர் செய்தாற் போல் வைப்பது நல்லது)
3. சுமார் 15 தொடக்கம் 20 வரையிலான நிமிடங்கள் வரை மாவை ஊற வைக்கவும்.
4. சப்பாத்தி கட்டையை வைத்து உருட்டுவதற்கு முன்னர் அந்த மாவை சரியான பதத்திற்கு வந்து விட்டாதா என ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
5. பின்னர் சரியான ஒரு அளவில் மாவை உருட்டி அதனை தோசைக்கல்லில் போட்டு பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுக்கவும்.
6. சப்பாத்தியை பொன்னிறமாக்குவதில் சீனி முதல் இடத்தை பிடிக்கிறது. அதனால் கடைசியாக மாவில் சீனி சேர்த்து பிசைந்து வைக்க வேண்டும்.