ஒரு கப் கோதுமை மாவு இருந்தா போதும்: மொறுமொறுப்பான சிப்ஸ் செய்து சாப்பிடுங்க
நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ள கோதுமையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
சப்பாத்தி தவிர்த்து கோதுமையில் பல்வேறு வகையான உணவுகள் செய்து சாப்பிடலாம்.
இந்த பதிவில் கோதுமை சிப்ஸ் செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு - 2 கப்
- வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
- ஓமம் - அரை டீஸ்பூன்
- சமையல் சோடா - ஒரு சிட்டிகை
- எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை
கோதுமை மாவை ஒரு பவுலில் போட்டு, உப்பு, வெண்ணெய், ஓமம், சமையல் சோடா சேர்த்துப் பிசிறவும். இதில் நீர் தெளித்து, கெட்டியான பூரி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும்.
அப்பளக்கல்லில் சிறிது எண்ணெய் தடவி சிறிய ஆரஞ்சு சைஸ் அளவில் பிசைந்த மாவை எடுத்து உருட்டி, வெறும் மாவில் புரட்டவும். இதை அப்பளக்கல்லில் சப்பாத்தி போல திரட்டவும்.
பிறகு, கத்தியால் சின்ன பிஸ்கட் வடிவில் அரை இஞ்ச் துண்டுகளாக 'கட்’ செய்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஒரு கைப்பிடி அளவு சிப்ஸை போட்டு, அடுப்பை 'சிம்’மில் வைத்து, சிறிது சிவந்ததும் திருப்பிப் போடவும்.
சிப்ஸ் பொன்னிறமாக, முறுகலாக ஆனதும், ஒரு வடிதட்டில் எடுக்கவும். இதைப் போல் மீதமுள்ள மாவையும் சிப்ஸ்களாக செய்து, ஆறவிட்டு, எல்லாவற்றையும் காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து பயன்படுத்தவும்.