கடலைப்பருப்பும், கீரையும் வீட்டில் இருக்குதா? சத்தான இந்த ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடுங்க
கீரை மற்றும் கடலைப்பருப்பு கொண்டு தயாரிக்கும் பான் கேக்கை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக மாலை நேரம் வந்துவிட்டாலே குழந்தைகள் வீட்டில் ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்புவார்கள். கடைகளில் வாங்கி கொடுக்கும் ஸ்நாக்ஸை விட வீட்டில் செய்து கொடுக்கும் ஸ்நாக்ஸ் ஆரோக்கியமானதாக இருக்கின்றது.
தற்போது கடலைப்பருப்பு மற்றும் கீரை கொண்டு தயாரிக்கப்படும் சத்தான ஸ்நாக்ஸ் குறித்து தெரிந்து கொள்ளலாம். இவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். குறித்த பான் கேக் எவ்வாறு செய்வது என்பதை விரிவாக தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
1/2 கப் - கடலைப்பருப்பு (5 மணி நேரம் ஊறவைத்தது)
1/2 கப் - பொடியாக நறுக்கிய கீரை
1/2 கப் - துருவிய கேரட்
1கொத்து - கறிவேப்பிலை(பொடியாக நறுக்கியது)
1 ஸ்பூன் - பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
1 தேக்கரண்டி - துருவிய இஞ்சி
2 ஸ்பூன் - தயிர்
தேவையான அளவு - உப்பு
4 ஸ்பூன் - எண்ணெய்

செய்முறை
முதலில் ஊற வைத்த கடலைப்பருப்பை கொரகொருப்பாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் கீரை, கேரட், கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய், தயிர், எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
பின்பு தோசைக்கல்லினை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் அரை ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, மாவை சிறியதாக பான் கேக் அளவில் செய்யவும்.

சுற்றி எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் இரண்டு புறமும் பொன்னிறமாகும் வரை வேக வைக்க வேண்டும். இதே போன்று மீதமுள்ள மாவையும் ஒவ்வொன்றாக சிறிய அளவிலான பான் கேக்காக செய்து கொள்ளவும்.
அவ்வளவு தான் சத்தான கடலைப்பருப்பு, கீரை பான் கேக் தயார். இதனை சட்னியுடன் வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாகவே இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |