குஷ்பு திருமணத்திற்கு அழைக்கவில்லை..அவர்கள் லெவல் பெரிதாகிவிட்டதா? நடிகர் ராதா ரவி
குஷ்பூ - சுந்தர்.சி மகள் திருமணத்தில் தன்னை அழைக்கவில்லை என நடிகர் ராதா ரவி குஷ்பு மற்றும் சுந்தர் சிக்கு எதிராக பேட்டி அளித்துள்ளார்.

குஷ்பு மகள் திருமணம்
பிரபல இயக்குநர் மட்டுமல்லாமல், நடிகராகவும் உள்ளார் சுந்தர். சி. இவரது மனைவி குஷ்பு தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களில் மக்களால் போற்றபட்ட ஒருவராவார்.
இவர்களின் மூத்த மகள் அவந்திகா. இவருக்கும் ஷ்ரவன் ஸ்ரீனிவாசனுக்கும் கடந்த ஜூன் 25-ம் தேதி கோவாவில் திருமணம் நடைபெற்றது. பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் தற்போது நடிகர் ராதா ரவி அவரை திருமணத்திற்கு அழைக்கவில்லை என யூடிப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார்.

நடிகர் ராதா ரவி
ராதா ரவி பேட்டியில் “குஷ்பு என்னை அவரது மகள் திருமணத்துக்கு கூப்பிடவில்லை. அதனால் போகல. திருமணத்தை கோவாவில் நடத்தினார்கள். அவர்கள் லெவல் பெரிதாகிவிட்டதா என தெரியவில்லை.
சுந்தர்.சி என்னை கூப்பிடுவார் என நினைத்தேன். ஆனால் கூப்பிடவில்லை. நடந்து முடிந்த தேர்தலில் சுந்தர்.சி மதுரையில் போட்டியிடும்போது, நான் தான் அவரை வாழ்த்தி அனுப்பினேன்.

ஆனால், அவரும் கூப்பிடவில்லை. ஒருவேளை தேர்ந்தெடுத்து சிலரை மட்டும் கூப்பிட்டார்கள் போல. அழைத்திருந்தால் நான் சென்றிருப்பேன்.
இப்போது நான் அவர்களுக்கு தேவையில்லை என நினைக்கிறேன். அவர்கள் தேர்தலில் நின்ற போது நான் உதவினேன். அப்போது தேவை இருந்தது. இப்போது தேவையில்லை போல.” என தெரிவித்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |