வீட்டில் சுரக்காய் இருக்கா? அப்போ சுவையான ஆரோக்கியமான அடை இப்படி செய்ங்க
ஆரோக்கியமான உணவு சாப்பிடதல் உடலின் பல ஆரோக்கி நன்மைகளை கொடுக்கும். அந்த வகையில் வீட்டில் இருக்கும் சுரக்காய் மற்றும் பறங்கிக்காய் வைத்த மிகவும் சுவையான அடை செய்ய முடியும்.
சுரைக்காயில் வைட்டமின் பி, சி சத்துகளை கொண்டுள்ளது. நீர்சத்து 96.07 %, இரும்புச் சத்து 3.2%, தாது உப்பு 0.5 %, பாஸ்பரஸ் 0.2%, புரதம் 0.3%, கார்போஹைட்ரேட் 2.3% போன்ற சத்துகளை கொண்டுள்ளது.
இது சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு, ஆகிய நோய்களுக்கு சிறந்தது. அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிடலாம். கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது.
மேலும் நாவறட்சியை போக்கும்.,தை விடவும் பல நன்மைகள் நிறைந்த சுரக்காயை நாம் எப்படி அடையாக செய்து சாப்பிடலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சிவப்பரிசி – அரை கப்
- இட்லி அரிசி – அரை கப்
- துவரம் பருப்பு - கால் கப்
- கடலை பருப்பு – கால் கப்
- உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்
- பாசிபருப்பு – கால் கப்
- வர மிளகாய் – 5
- சோம்பு – ஒரு ஸ்பூன்
- பரங்கிக்காய் – அரை கப்
- சுரைக்காய் அரை கப்
செய்யும் முறை
முதலில் அனைத்து அரிசி மற்றும் பருப்பு வகைகளை அலசி நன்றாக ஊறவைக்கவேண்டும். இதை இரண்டு மணி நேரம் ஊறவைத்துவிட்டு, சுத்தமாக கழுவி அரைத்துக்கொள்ளவேண்டும்.
அரைக்கும்போது வரமிளகாய், சோம்பு, பரங்கிக்காய், சுரைக்காய் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். மாவை கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
மாவில் விருப்பப்பட்டால் முருங்கைக்கீரை, தேங்காய் துருவல் சேர்த்து அடைகளாக வார்த்துக்கொள்ளளலாம். ஆனால் இல்லாவிட்டாலும் அப்படியே அடைகளாக வார்த்து எடுத்துவிடவேண்டும். இப்படி செய்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான அடை தயார். சுரக்காயை பிடிக்காத குழந்தைகள் கூட இதை சாப்பிடுவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |