தேங்காய் சட்னியுடன் இந்த பொருளை சேர்த்தால் போதும்! சுவை பிரமாதம்
பொதுவாகவே இந்திய உணவுகளில் சட்னி வகைகளுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. குறிப்பாக இட்லி, தோசைக்கு பெரும்பாலானவர்களின் தெரிவு தேங்காய் சட்னி தான்.
எப்போதும் போல வழமையான முறையில் தேங்காய் சட்னி செய்யாமல் அடுத்த முறை சட்னி செய்யும்போது இந்த பொருளையும் சேர்த்து செய்து பாருங்க சுவை அட்டகாசமாக இருக்கும்.
அட்டகாசமாக சுவையில் முந்திரி சேர்த்து தேங்காய் சட்னியை எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
துருவிய தேங்காய் - 1 கப்
பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 2
இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 2 தே.கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
முதலில் துருவிய தேங்காய் 1 கப், பொட்டுக்கடலை, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சுவைக்கேற்ப உப்பு சேர்த்து ஒரு முறை அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து முக்கியமாக சுவையை அதிகரிக்க 2 முந்திரியையும் அதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சற்று கொரகொரப்பான பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்ததும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து லேசாக பொன்னிறமாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்
அதன் பின்பு அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்தால் அவ்வளவு தான் அட்டிமேட் சுவையில் தேங்காய் சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |