மணக்க மணக்க பிரியாணி செய்யணுமா? அப்போ பிரியாணி மசாலா இப்படி அரைத்து பாருங்க
பிரியாணி என்றால் விரும்பாத மக்களே இல்லை. அனைவருக்கும் பிரியாணியை ருசிப்பது ஒரு பழக்கமாக வைத்துள்ளனர். இதில் பல வகை உண்டு.
என்னதான் நாம் வீட்டில் இதை செய்து சாப்பிட்டாலும் கடைகளில் மற்றும் பாய் வீட்டு பிரியாணி என்றால் அது மிகவும் சுவையாகவும் கமகம என்றும் இருக்கும்.
இந்த பாய் வீட்டு பிரியாணியை செய்வதற்று எல்லோரும் என்ன மசாலா ரகசியத்தை வைத்துள்ளார்கள் என்று பலரும் யோசித்திருப்போம்.
இன்று மணக்க மணக்க எப்படி பிரியாணிக்கு மசாலா செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பட்டை - 25 கிராம்
- ஏலக்காய் - 10 கிராம்
- கிராம்பு - 10 கிராம்
- அன்னாசி பூ - 5 கிராம்
- ஜாதிபத்திரி - 5 கிராம்
- பிரியாணி இலை - 5 இலை
- மல்லி - 1 தேக்கரண்டி
- சோம்பு - 1 தேக்கரண்டி
- மிளகு - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- வரமிளகாய்- 10 கிராம்
செய்யும் முறை
மேலே குறிப்பிட பட்டுள்ள அளவில் எல்லாப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
பின்னர் இவை எல்லாவற்றையும் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸியில் அனைத்தையும் கொட்டி பவுடர் போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மசாலாவை நீங்கள் பிரியாணி செய்யும் போது ஒரு தேக்கரண்டி சேர்க்கலாம். 1 கிலோ சிக்கன் பிரியாணி செய்தால் இதில் ஒரு ஸ்பூன் சேர்த்தால் போதும்.
வேறெந்த மசாலாவும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை சுவை அட்டகாசமாக இருக்கும். இந்த பொருட்களை நீங்கள் வறுத்து எடுத்து அரைத்தால் இதை கெட்டுப்போகாமல் 6 மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.
வறுக்கவில்லை என்றால் வண்டு வரும் அளவிற்கு கெட்டுபோய் விடும். பிரியாணியை தவிர நீங்கள் மசாலா சேர்க்க வேண்டிய எல்லா உணவுகளுடனும் ஒரு ஸ்பூன் சேர்க்கலாம்.