மணமணக்கும் வாழைப்பழப்பூரி செய்வது எப்படி? 10 நிமிடங்கள் செய்யலாம்...
பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே எண்ணற்ற நன்மை அள்ளித்தருகிறது வாழைப்பழம்.
இதில் அதிகமான வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் வாழப்பழம் ஒரு நிறை உணவாக பார்க்கப்படுகிறது.
மேலும் இதனை தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்வதால் குடல்புண், ரத்தபேதி, மூல நோய் ஆகியவை குணமாகும்.
வாழைப்பழத்தை செரிமான பிரச்சினையுள்ளவர்கள் தன் அதிகமாக எடுத்துக் கொள்வார்கள். ஏனெனின் இதில் அதிகமான நார்ச்சத்துக்கள் இருக்கிறது.
மேலும் வாழைப்பழத்தைக் கொண்டு வாழைப்பழ சாலட், ப்ரஸ் ஜீஸ், வாழைப்பழ பச்சி, வாழைப்பழ கேக் என பல வகையான உணவுகளை தயாரிக்கலாம்.
அந்தவகையில் வாழைப்பழத்தை பயன்படுத்தி வாழைப்பழப்பூரி எவ்வாறு தயாரிப்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
image - Bananas are high in potassium and contain good levels of protein and dietary fiber.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 1/2 கப்
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் வாழைப்பழம் - 1
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
சர்க்கரை - 2 தேக்கரண்டி
தயிர் - 1 மேசைக்கரண்டி
தயாரிப்பு முறை
முதலில் மிக்சியில் வாழைப்பழம், ஏலக்காய் தூள், சர்க்கரை, தயிர் என்பவற்றை ஒன்றாக சேர்த்து மா போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பவுலில் கோதுமை மாவை போட்டு அதனுடன் சீரகம், சமையல் சோடா சேர்த்து நன்றாக கலந்த பின்னர், அரைத்த வைத்திருக்கும் வாழைப்பழ விழுதை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.
இவ்வாறு பிசையும் போது தண்ணீர் சேர்ப்பது அவசியமில்லை, பிசைந்த மாவை சுமார 10 - 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இதனால் மாவிலுள்ள நொதிகள் கரைந்து மெதுவான பூரியை பெற முடியும்.
இதனை தொடர்ந்து பூரிக்கு மாவை தட்டுவது போல் தட்டி ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் பொட்டு பொரித்தெடுக்க வேண்டும். தற்போது ஆவலுடன் எதிர்பார்த்த வாழைப்பழப்பூரி தயார்.