10 நிமிடங்களில் சுவையான வாழைப்பழ கேக் செய்வது எப்படி?
நம் அனைவருக்குமே வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி தெரிந்திருக்கும், தொடர்ச்சியாக மதிய உணவிற்கு பிறகு வாழைப்பழத்தினை சாப்பிடுவதனால் வயிற்று பகுதிகளில் உள்ள குடற்புழுக்களை நீக்கி வயிற்று பகுதி சுத்தப்படுத்தபடும்.
இந்த பழத்தில் அதிக வைட்டமின் சத்துக்கள் இருப்பதால் கண்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கிறது மற்றும் இதில் ஆன்டி ஆக்சிடண்ட் அதிகம் இருப்பதால் செல்களின் செயல்பாட்டு திறனை சீராக வைத்திருக்கும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்து ஆண்களின் உயிர் அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க செய்யும்.
கோடை கால நேரத்தில் பச்சை வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு நீங்கி உடலானது குளிர்ச்சி தன்மையாக மாறும்.
இப்படி பல நன்மைகளை கொண்ட வாழைப்பழத்தை கொண்டு கேக் செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
- All-Purpose Flour - ஒரு கப்
- சர்க்கரை - ஒரு டேபிள் ஸ்பூன்
- பேக்கிங் பவுடர் - இரண்டு டீஸ்பூன்
- உப்பு - 1/4 டீஸ்பூன்
- நன்கு பழுத்த வாழைப்பழம் - 2
- எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
தயாரிப்பு முறை
மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள்.
பின்பு பால், எண்ணெய் மற்றும் வாழைப்பழங்களை ஒரு தனி கிண்ணத்தில் கலந்து கொள்ளுங்கள்.
இரண்டு கலவையையும் ஒன்றாக மா கட்டிகள் இல்லாமல் போகும் வரை கலந்துக் கொள்ளுங்கள்.
இதனையடுத்து மிதமான வெப்பத்தில் ஒரு தவாவை சூடாக்கி, கேக்கிற்கு சுமார் 1/4 கப் மாவை ஊற்றி லேசாக சுற்றி விடுங்கள்.
இரண்டு புறமும் நன்றாக பொன்னிறமாக மாறும் வரை திருப்பி எடுத்து, மேலே வெண்ணெய் வைத்து பரிமாறலாம்.
இவ்வாறு வாழைப்பழத்தை நாம் உண்ணும் உணவோடு சேர்த்து கொள்வதனால் வைத்தியரை நாட வேண்டிய தேவையே இருக்காது.எமக்கான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு வாழைப்பழத்தில் உள்ளது.