முட்டையே இல்லாமல் ஆம்லேட் போடலாம்: சைவ பிரியர்களுக்கு ஏற்ற உணவு இது தான்
நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும், நன்றாக இயங்குவதற்கும் உணவு மிகவும் முக்கியமானதாகும். அது சைவ உணவாக இருந்தாலும் சரி அசைவ உணவாக இருந்தாலும் சரி.ஆனால், இப்போதுள்ளவர்களுக்கு சைவ உணவை விட அசைவ உணவுதான் அதிகம் பிடித்திருக்கிறது.
உண்மையில் அசைவ உணவு வகைகளைப் போலவே சைவ உணவிலும் அதிக புரதங்கள் நிறைந்த உணவு வகைகள் உள்ளன. அதனை நாம் தான் அறிந்து உண்ணுவதில்லை.
அந்தவகையில் சைவ பிரியர்களுக்கு முட்டையே இல்லாமல் ஆம்லட் எப்படி ஆம்லேட் செய்வதென பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- கடலை மா
- வெங்காயம்
- தக்காளி
- மிளகு
- உப்பு
- பேக்கிங் பவுடர்
- மஞ்சள் தூள்
- பச்சை மிளகாய்
- மிளகு தூள்
- கொத்தமல்லி
செய்முறை
முதலில் ஒரு கப் கடலை மாவில் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் தக்காளி விதையில்லாமல் நீக்கி அதில் ஒரு கரண்டி மிளகு தூள் சேர்த்து பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய கொத்தமல்லியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும்.
பின் தோசைக் கல்லை நன்றாக சூடாக்கி எண்ணெய் விட்டு தோசை ஊற்றுவது போல கடலைமா கலவையை ஊற்றி திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால் முட்டையில்லாத ஆம்லட் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |