தோசை மாவு இல்லையா? அப்போ இப்படி தோசை செய்து கொடுங்க
பொதுவாக சில நேரங்களில் வீட்டில் உள்ள குழந்தைகள் தோசை மாவு இல்லாத சமயங்களில் தோசை செய்து தர சொல்லி கோட்பார்கள்.
குழந்தைகள் தானாக சாப்பிட கேட்பதே பெரிய விடயம் இவ்வாறாக நேங்களில் மாவு இல்லை என சொல்ல முடியுமா? கவலை வேண்டாம்.
ரவையை வைத்து அசத்தல் சுவையில் மொறு மொறு தோசையை வெறும் 15 நிமிடங்களில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ரவை - 1 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - 1/4 தே.கரண்டி
சோடா உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் ரவை, தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மென்மையான பதத்தில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அரைத்ததை மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, அதில் சிறிது நீரை ஊற்றி கலந்துவிட்டு பாத்திரத்தை மூடி 10 நிமிடங்கள் வரையில் ஊற வைக்க வேண்டும்.
நன்றாக ஊறிய பின்னர் மாவுடன், சோடா உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
அதனையடுத்து தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் மொறு மொறுப்பான ரவா தோசை தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |