சாக்லேட் சாப்பிட்டதும் சிலர் குஷியாகிவிடுவதற்கு என்ன காரணம்னு தெரியுமா?
பொதுவாகவே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் பொரும்பாலானவர்களின் விரும்பத்துக்குரிய உணவுகளின் பட்டியலில் நிச்சயம் சாக்லேட் முக்கிய இடம் பிடித்துவிடுகின்றது.
இன்னும் சொல்லப்போனால் சாக்லேட்டை சாப்பிட்டதுமே பலருக்கும் ஒரு மகிழ்ச்சியாக மற்றும் மன நிறைவான உணர்வு ஏற்படுவதால் அனேகமானோர் அதனை ஒரு ஆறுதல் உணவாகவும் கருதுகின்றனர்.

சாக்லேட் சாப்பிட்டதும் ஏன் இந்த மாற்றம் உண்டாகின்றது என்று எப்போதாவது சிந்தித்ததுண்டா? இது வெறும் உளவியல் பழக்கம் மாத்திரமல்ல இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சாக்லேட் ஏன் மகிழ்சியளிக்க காரணம்
ஆய்வுகளிக் பிரகாரம், சாக்லேட் சாப்பிடும் போது நமது மூளையில் உள்ள செரோடோனின், டோபமைன் மற்றும் எண்டோர்பின்கள் போன்ற ஹோர்மோன்களின் சுரப்பு துரிதப்படுத்தப்படுகின்றது.

இவை அனைத்தும் மகிழ்ச்சி, மனநிறைவு மற்றும் தளர்வு போன்ற உணர்வுகளுக்குப் பங்களிக்கும், மனதிற்கு இதமளிக்கும் வேதிப்பொருட்களாகக் கருதப்படுகின்றன.
செரோடோனின் மனநிலையை நிலைப்படுத்துகிறது, டோபமைன் இன்பம் மற்றும் மனநிறைவு போன்ற உணர்வுகளை வழங்குகிறது, அதே சமயம் எண்டோர்பின்கள் வலி மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் துணைப்புரிகின்றது.

இதன் காரணமாகவே சாக்லேட் சாப்பிட்ட பின்னர் நாம் இலகுவாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறோம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |