வீட்டில் காலிஃப்ளவர் இருக்கா? இப்படி ஒரு தடவை சமைத்து பாருங்க
வீட்டில் காலிஃப்ளவர் இருக்கும் சமயத்தில் அதை எப்படி சமைப்பது என்று பலருக்கும் தெரியாது. அதை இந்த பதிவில் பார்க்கலாம்.
காலிஃப்ளவர் கிரேவி
வீட்டில் எப்போதும் சப்பாத்தி ரொட்டி போன்ற உணவுகள் அடிக்கடி நீங்கள் செய்தால் அதற்கு காலிஃப்ளவர் கிரேவி மிகவும் பொருந்தும்.
ஆனால் காலிஃப்ளவரை வைத்து எப்போதும் ஒரே மாதிரி சமக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக சமைத்தால் சுவையாக இருக்கும். இந்த கிரேவி கறிக்குழம்புகளை மிக சுவையாக இருக்கும்.
மேலும் இந்த கிரேவி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். காலிஃப்ளவரில் அதிக சத்துக்கள் இருக்கிறது. இதை குழந்தைகள் முதல் பெரியவாகள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்
- காலிஃப்ளவர் - 1
வதக்கி அரைப்பதற்கு
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- வெங்காயம் - 2 (நறுக்கியது)
- தக்காளி - 2 (நறுக்கியது)
- பூண்டு - 4 பல்
- இஞ்சி - 1/2 இன்ச்
- முந்திரி - 10
- தண்ணீர் - தேவையான அளவு
- தாளிப்பதற்கு
- எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
- பட்டை - 1/2 இன்ச்
- கிராம்பு - 3
- ஏலக்காய் - 2
- பிரியாணி இலை - 1
- வெங்காயம் - பாதி (பொடியாக நறுக்கியது)
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
- மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1 டீஸ்பூன்
- தண்ணீர் - 2 கப்
- உப்பு - சுவைக்கேற்ப
- கொத்தமல்லி - சிறிது
- சர்க்கரை - 1/2 டீஸ்பூன்

செய்முறை
முதலில் காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக்கி, கொதிக்கும் நீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அதில் துண்டுகளாக்கப்பட்ட காலிஃப்ளவரை சேர்த்து 2 நிமிடம் வேக வைத்து ஒரு தட்டில் தனியே எடுத்து வைக்க வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
பின் அதில் நறுக்கிய தக்காளி, பூண்டு இஞ்சி, முந்திரி சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். பிறகு மிக்சியில் வதக்கிய பொருட்களை சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும். அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து எண்ணெய் பிரிய வதக்க வேண்டும். பிறகு அதில் காலிஃப்ளவரை சேர்த்து நன்கு கிளறி, பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து நன்கு கிளறி, 2 கப் நீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பின்னர் 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து கொத்தமல்லி மற்றும் சர்க்கரையை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான காலிஃப்ளவர் கிரேவி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |