ஜிம் பயிற்சியை திடீரென நிறுத்தி விட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த மாற்றங்கள் எல்லாம் உங்கள் உடலில் ஏற்படும்!
பொதுவாகவே இப்போதுள்ளவர்கள் உடல் எடை அதிகரிப்பதற்கும் குறைப்பதற்கும் ஜிம்மிற்கு செல்வார்கள். ஆனால் அதை தொடர்ந்து செல்வார்களா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
அவ்வாறு இடையில் நிறுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா?
சில மாதங்கள் ஜிம் சென்றதும் உங்களது தசைகள் சற்று இறுகி வலுவாகும். அப்போது நீங்கள் திடீரென ஜிம் பயிற்சியை கைவிட்டுவிட்டால் தசை வலி ஏற்படலாம்.
மேலும் இறுக்கமான தசைகள் படிப்படியாக தளர்ந்து வலுவிழக்க கூடும். ஜிம் பயிற்சியின் போது உங்கள் உடலில் இருந்து அதிகளவான வியர்வை வெளியேறும், பயிற்சியை நிறுத்தி விட்டால் உடலில் இரு வெளியேறும் வியர்வையும் குறைந்து விடும்.
மேலும், நீங்கள் சாப்பிடும் கொழுப்பு உணவுகள் அடிவயிறு, தொடை தசைகளின் கீழ் கொழுப்பை சேகரித்து நாளடைவில் தொப்பையை வரவழைக்கும்.
ஜிம் பயிற்சியில் ஈடுபடும்போது அதிகளவு எண்டோர்ஃபைன், செராடினான், டோபோமைன் ஹார்மோன்கள் சுரக்கும். இதனால் உங்களது நாள் புத்துணர்ச்சியுடன் துவங்கும். திடீரென ஜிம் பயிற்சி நின்றால் உங்கள் மன மகிழ்ச்சி அளவு குறையும்.
அதிக வேலை இன்றி இருந்த தசைகளுக்கு ஜிம்முக்கு செல்லும்போது வேலைபளு அதிகரிக்கும். பயிற்சியை நிறுத்தியவுடன் தசைகளுக்கு மீண்டும் வேலையில்லாமல் தசைகள் பாதிக்கப்படும்.
இதில் ஒரு சிலருக்கு ஜிம் பயிற்சியை கைவிட்டவுடன் உடல் எடை திடீரென அதிகரிக்கும். இதனால் உடல் பருமன் அதிகரித்து ஹார்மோன் சுரப்பு அளவுகளில் மாற்றம் எற்படும்.