வெந்தயம் ஒரே ஒரு ஸ்பூன் போதும்... 3 கிலோ வரை கிடுகிடுனு தொப்பை குறைய!
பொதுவாக பெண்கள் ஒரு குழந்தையை பெற்றெடுத்த பிறகு பெண்களுக்கு வயிற்று பகுதியிலும், இடுப்பு பகுதியிலும் சதை அதிகமாக சேரும்.
அதை நாம் வயிற்று கொழுப்பு மற்றும் பக்க கொழுப்பு என்று சொல்லுவோம்.
இந்த belly fat குறைப்பதற்கு சிறந்த ஒன்றாக வெந்தயம் பயன்படுகிறது.
வெந்தயம் பலவகையான அற்புத மருத்துவ குணங்களை கொண்டது.
மேலும் வெந்தயம் அதிக குளிர்ச்சி தன்மையுடையது. அதுவும் இந்த வெந்தயத்தை தண்ணீரில் கொதிக்கவைத்து, குடித்து வந்தோம் என்றால் ஒரே வாரத்தில் 2 அல்லது 3 கிலோ வரை தொப்பை குறைய (belly fat) உதவுகிறது.
தொப்பை குறைய(weight loss) வெந்தய டீ
செய்முறை
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும், பின்பு அவற்றில் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை நன்றாக கொதிக்க வைத்துக்கொள்ளவும்.
இந்த நீரை தினமும் ஒரு டம்ளர் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் சேரும் தேவையற்ற தொப்பை குறைய (belly fat) வழிவகுகின்றது.
