வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
முக்கனிகளில் ஒன்றான வாழையில் பல மருத்துவகுணங்களும், சத்துக்களும் நிறைந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த தகவலே.
வாழைப்பழத்தில் பொட்டாஷியம், மக்னீஷியம், இரும்புச்சத்து, ட்ரிப்டோபான், வைட்டமின் பி6, கால்சியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. வைட்டமின் ஏ, பி, பி2, சி மற்றும் சுண்ணாம்புச்சத்து ஆகியவையும் உள்ளன.
இருப்பினும் சிலருக்கு இதனை வெறும் வயிற்றில் காலையில் வாழைப்பழத்தை சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா? என்ற சந்தேகம் காணப்படும். தற்போது அதனை என்ன என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
வெறும் வயிற்றில் சாப்பிடலாமா?
வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதல்ல. வாழைப்பழத்தில் உள்ள சக்கரை உங்களுக்கு சக்தியை அளித்தாலும், சில மணி நேரத்தில் அதை உறிஞ்சி எடுக்கிறது.
வாழைப்பழங்கள் தற்காலிகமாக புத்துணர்வை அளித்தாலும், பின்னர் தூக்கம் மற்றும் களைப்பாக உணர வைக்கின்றன.
வாழைப்பழங்களில் இயற்கையில் அமிலங்கள் இருக்கின்றன. எனவே, இது வயிற்றுப் பிரச்சனைக்கு காரணமாக அமையலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு தாறுமாறாக நன்மை அளிக்கும் சிகப்பு அரிசி
எப்போது சாப்பிடலாம்?
வாழைப்பழம் காலையில் சாப்பிடுவதற்கு ஏற்ற பழமாக இருந்தாலும், அதனை வெறும் வயிற்றில் மட்டும் உண்ணக்கூடாது. மற்ற பழங்களுடன் சேர்த்து கலவையாக உண்டால் எந்த பிரச்சனையும் இல்லை.
ஆப்பிள் உள்ளிட்ட பிற பழங்களுடன் கலந்து சாப்பிவது, வாழைப்பழத்தில் உள்ள அமிலங்களின் செயல்திறனை குறைக்க உதவுகிறது.
குறிப்பு
இப்போது அனைத்து வகையான பழங்களிலும் கெமிக்கல் கலந்நிருப்பதால், எந்தப் பழத்தையும் தனியாக வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வது சிறந்ததில்லை என உணவு நிபுணர்கள் கூறுகின்றனர்.