பிரசவ வலியை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறிகள்- மருத்துவர் விளக்கம்
“தாய்மை” என்பது இந்த உலகில் பிறந்த அனைத்து பெண்களின் முக்கிய பங்காகும்.
பெண்கள் திருமணத்திற்கு பின்னர் குழந்தை பெற்றுக் கொள்ள ஆவலாக இருப்பார்கள்.
அதே சமயம், கர்ப்ப காலத்தில் பிரசவ வலி குறித்து சிந்தித்து பயம் கொள்வார்கள். 9 ஆவது மாதம் நெருங்கும் பொழுது சிலருக்கு பிரசவ வலி வருவதற்கான ஒரு சில அறிகுறிகள் தோன்றுகின்றன.
மேலும் சிறந்தது என்னவென்றால் அந்த வலிக்கான தீர்வுகளும், நிவாரணிகளும் தெரிந்துகொள்வது அவசியம். பிரசவ வலி வரும் முன்னர் 2 அல்லது 3 வாரத்திற்கு முன்னரே உடல் தயாராகி விடும்.
அந்த வகையில் பிரசவ வலிக்கு முன்னர் ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பிரசவ வலிக்கு முன்னர் ஏற்படும் அறிகுறிகள்
1. இயல்பாக கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிக அளவு முதுகு வலி இருக்கும். ஆனால் பிரசவ வலி வரும் முன்னர் இந்த வலி சற்று அதிகமாக இருக்கும்.குறிப்பாக கீழ்ப்புற முதுகுப்பகுதியில் அதிக வலி இருக்கும். இப்படியான அறிகுறிகள் இருந்தால் உங்களின் குழந்தையை பார்க்க தயாராக இருங்கள்.
2. முன்கூட்டியே பிரசவ வலி ஏற்படும் காலத்தில் பிறப்புறுப்பில் இரத்த கசிவு அதிகமாக இருக்கும். ரத்த கசிவு ஆரம்பித்து விட்டது என்றால் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும்.
3. பிரசவ வலி ஏற்படும் முன்னர் தாய்மார்களுக்கு இடுப்பு பகுதியில் அதிக அழுத்தம் இருப்பது போன்று உணர்வார்கள். அத்துடன் பிறப்புறுப்பில் வலி ஏற்படும். இது பிரசவ வலி முன்கூட்டியே வரபோவதாக உணர்த்தும்.
4. கர்ப்ப காலத்தில் சிறிது காய்ச்சல் இருப்பது போன்று உணர்வு இருந்தால் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும். குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி இருந்தால் திரவ உணவுகளை 8 மணி நேரத்திற்கு ஒருமுறை எடுத்து கொள்ள வேண்டும். அந்த சமயத்தை நாம் சமாளிக்க முடியவில்லை என்றால் உரிய மருத்துவரை பார்க்க வேண்டும்.
5. கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்வது சாதாரணமான விடயம் என்றாலும் வழக்கத்தை விட அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் உங்களுக்கு பிரசவ வலி வரப்போகின்றது என்று அர்த்தம்.ஏனெனின் இந்த காலப்பகுதியில் சிறுநீர்ப்பையில் அதிகமான அழுத்தம் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
