பற்கள் மஞ்சள் கரை போகவில்லையா? உடனே சரிசெய்ய எளிய வழிமுறை இதோ!..
பலருக்கும் இருக்கும் பெரிய பிரச்சினைகளில் ஒன்று பற்கள் மோசமடைவது தான். அதிலும், பற்களில் மஞ்சள் கறை படிந்தால் அதை எப்படி சரிசெய்வது என்பதை பற்றி பார்ப்போம்...
கறைபடிந்த பற்களை கொண்டிருப்பவர்கள் இனி கவலை இல்லாமல் இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.
ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் இவைகளில் ஏதேனும் ஒன்றை, ஆரம்பத்தில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெயை வாயில் விட்டு 15 நிமிடங்கள் வரை கொப்புளித்தபடி இருங்கள்.
ஆரம்பத்தில் பிசுபிசுப்பும் பிறகு படிப்படியாக அது நுரை கொண்ட வெண்ணெய் போன்றும் ஆகும். இடைப்பட்ட நேரத்தில் சில நிமிடங்கள் வாயை அப்படியேவும் வைத்திருக்கலாம்.
பிறகு மீண்டும் கொப்புளிக்கலாம். அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்புளியுங்கள். இது பாதுகாப்பானது.
சில வாரங்கள் தொடர்ந்து செய்தாலே சில மாதங்களுக்கு உங்கள் பற்களை வெண்மையாக வைத்திருக்கும்.
அடுத்து, டார்க் சாக்லேட்.. இவை சுவையும் சத்தும் மிகுந்தவை. இதில் உள்ள த்யோப்ரோமைன் என்னும் பொருள் பற்சிப்பிகளை கடினப்படுத்துகிறது. அதிக கறை படிந்த பற்கள் உணவால் ஏற்பட்டிருந்தால் இது நோய் தீர்க்கும் சிகிச்சையாக சொல்லலாம்.
உண்மையில் அதிசயம் செய்யும் இதை நீங்கள் விரும்பியும் சாப்பிடுவீர்கள் என்பதால் இதை மகிழ்ச்சியோடு தொடங்குங்கள்.
கேரட் என்றால் ஆரஞ்சு நிறத்தில் கலராக ஃப்ரெஷ்ஷாக மட்டுமே இருக்கும் என்று நினைக்கிறோம். கருப்பு கேரட் என்று சொல்லகூடிய இது கண்களுக்கும் பற்களை வெண்மையாக்கவும் உதவுகிறது.
இது உடலில் தொற்று நோய் உருவாவதையும் தடுக்கிறது. பற்களை மெதுவாக வெண்மையாக்கி அதன் கறைகளை வெளியேற்றுகிறது.
மேலும், கருப்பு கேரட்டை தினப்படி ஒன்று என்று சுத்தம் செய்து மென்று சாப்பிடுங்கள். காலப்போக்கில் இது பற்களின் நிறத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உண்டாக்க கூடும்.
அடுத்ததாக, வாழைப்பழத்தோலை சருமத்தின் சிறிய பகுதியை எடுத்து தோலின் உட்புறமாய் வைத்து பற்களின் 15 நிமிடங்கள் வரை தேய்க்கவும்.
காலையில் எழுந்தவுடன் வெறும் நீரில் வாய் கொப்புளித்து இதை செய்த பிறகே பற்களை வழக்கம் போல் தேய்க்கவும்.
பேஸ்ட்டை எடுத்து அதில் சில துளிகள் ஆலிவ் எண்ணெய் சேர்த்து இரண்டையும் குழப்பி விடவும். பிறகு இதை பற்களில் தேய்த்து வந்தால் பற்கள் கறை நீங்கும்.
தினமும் செய்து வந்தால் 15 நாட்களில் பலன் தெரியக்கூடும். பற்களின் கறை நீக்கத்தை நீங்களே பார்க்கலாம்.