வீட்டில் பல்லி தொல்லையா? இதை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க
பொதுவாகவே அனைவரும் விரும்பாத உயிரினங்களின் பட்டியலில் பல்லி முக்கிய இடம் வகிக்கின்றது. வீட்டின் அனைத்து அறைகளிலும், சுவர்களின் மீதும் ஊர்ந்துகொண்டு இருக்கும் பல்லியை பார்க்க சிலருக்கு பயம்.. சிலருக்கு அருவருப்பு.
ஆனால் பல்லியை கொல்லுவது பெரிய பாவம் என்று நம் பெரியோர்கள் கூறி வைத்திருக்கின்றார்கள். அந்த பல்லி எப்போது எங்கு விழும் என்ற சந்தேகமும் பலருக்கு பீதியை உருவாக்கும். காரணம் பல்லி விழுவதை வைத்து சில நம்பிக்கைகளை பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள்.
வீட்டில் நாம் பயன்படுத்தும் சில பொருட்களை வைத்தே பல்லியை வீட்டு பக்கமே வராதபடி செய்துவிடலாம். எவ்வாறு பல்லிகளைக் கொல்லாமல் வீட்டில் இருந்து வெளியேற்றலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பல்லியை விரட்ட...
அந்துருண்டை பூச்சிகளை விரட்டும் தன்மை கொண்டது. இதனை அடுப்புக்கு அடியில் அல்லது வீட்டின் மூலையில் அல்லது அலமாரியில் வைத்தால் பல்லிகள் வராது.
பூண்டு பற்களை சுவரில் தொங்கவிடுவது அல்லது பல்லிகள் அதிகம் உள்ள இடங்களில் பூண்டு வைப்பது பல்லிகளை விரட்டுவதற்கு பெரிதும் துணைப்புரியும்.
முட்டை ஓடுகளிலிருந்து வரும் வாசனையை பல்லிகள் விரும்புவதில்லை. எனவே, வீட்டில் அடிக்கடி பல்லிகள் வரும் இடங்களில் காலியான முட்டை ஓடுகளை வைக்கவும். பல்லிகளின் நடமாட்டம் நீங்க ஆரம்பிக்கும். ஆனால் முட்டை ஓடு வைத்தவுடனேயே பல்லிகள் வராது என எதிர்பார்ப்பது தவறு.
முட்டை ஓடுகளை தொடர்சியாக ஒரு இடத்தில் பல்லிகள் கண்டால் பல்லிகள் குறித்த இடத்துக்கு வருவதை நிறுத்திவிடுகின்றதாக ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மயில் இறகுக்கு பல்லிகள் பயப்படுவதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. பல்லிகள் நடமாடும் இடத்தில் மயில் இறகுகளை வைத்துவிட்டால் போதும் பல்லிகள் அந்த பக்கமே வராதாம்.
பல்லிகளை விரட்டுவதில் மிகவும் பயனுள்ள முறைகளில் ஒன்று புகையிலை பொடியுடன் காபி தூளை கலந்து சிறு உருண்டைகளாக செய்து, பல்லி அதிகம் உள்ள இடங்களில் வைப்பது. இதன் மூலம் பல்லிகளின் நடமாட்டம் கணிசமாக குறைய ஆரம்பிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |