காதல் தோல்வியால் வேதனைப்படுகின்றீர்களா? மீள்வது எப்படி?
பொதுவாகவே எல்லா உயிர்களுக்கும் அடிப்படை தேவை அன்பு தான். அதனை அடிப்படையாக வைத்து தான் இந்த உலகம் இயங்குகின்றது என்றால் மிகையாகாது.
குறிப்பாக மனிதர்களுக்கு அன்பு மிகவும் இன்றியமையாத அடிப்படை தேவை என்றே கூறவேண்டும். காதல் என்பதும் அன்பை வெளிப்படுத்தும் இன்னொரு பரிமாணமே ஆகும்.
இந்த உலகத்தில் மிக மிக பழைய உணர்வும் காதல் தான். மிக மிக புதிய உணர்வும் காதல் தான்.இது யாருக்கு யார் மீது எந்த சமயத்தில் ஏற்படும் என்பதை யாராலும் கணிக்கவே முடியாது.
ஒரு மந்திரம் போல் வாழ்வில் நடந்துவிடும். அப்படி யாரின் மீது காதல் உணர்வு ஏற்படுகின்றதோ அவர்களை மனம் அதிகமாக நம்ப ஆரம்பித்துவிடும்.
வாழ்க்கை முழுவதும் இந்த உறவு வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிடும். பின்னர் இந்த உறவு இல்லாவிட்டால் வாழ்வில் எதுவும் இல்லை என்பது போன்ற உணர்வு தானகவே தோன்றுவதும் இயல்பானதே.
ஆனால் மனித வாழ்வு என்பது தனியாக பயணத்தை ஆரம்பித்து வழியில் சில உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு இறுதியில் தனியாக இந்த உலகத்தில் இருந்து விடைபெறுவது தான் என்பதே உண்மை. அது கேட்பதற்கு சற்று வருத்தம் தருவதாக இருந்தாலும் இது தான் நிசர்சனம்.
வாழ்வில் எத்தனை உறவுகள் இருந்தாலும் காதல் உறவு சற்று வித்தியாசமானது தான். அப்படி நாம் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு உறவு முறியும் போது ஏற்படும் வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
காதலித்த ஒரு நபர் நம்மை விட்டு பிரிந்த பிறகு மிகவும் வருத்தமாக உணர்வோம். இவ்வுலகில் நமக்காக யாரும் உருவாக்கப்படவில்லை என்பது போன்ற உணர்வும் ஏற்படுவதுடன் சிலருக்கு மனிதர்கள் மீது இருக்கும் நம்பிக்கையும் கூட அழிந்துவிடும்.
ஒரு காதல் உறவு நம்மை விட்டு பிரியும் போது வெறுப்பு, வலி அல்லது கோபம் இவை எல்லாவற்றையும் விட அதிக வேதனையையும் விரக்தியையும் கொடுக்கக்கூடியது.
காதல் தோல்வி என்பது மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் நம்மை சிதைத்து நம்முடைய ஒட்டுமொத்த வாழ்வையும் தலைகீழாக மாற்றிவிடக்கூடிய வல்லமை கொண்டது. இதனை பலரும் வாழ்வில் ஒரு முறையாவது நிச்சயம் அனுபவித்திருக்ககூடும்.
காதல் தோல்வியில் இருந்து மீள்வது எப்படி?
காதல் தோல்வியுடன் வாழ்க்கை முடிந்து போவது கிடையாது. அதன் பின்னரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நிச்சயம் முடியும். காதல் தோல்வியில் இருப்போருக்கு இந்த அறிவுரை கோபத்தை தான் ஏற்படுத்தும்.
இருப்பினும் அது தான் உண்மை அந்த தோல்வியை புறக்கணிக்க தேவையில்லை. மாறாக அதனை ஒரு பாடமாகவும் அனுபவமாகவும் எடுத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். ஆனால் இது சொல்லும் அளவுக்கு இலகுவான விடயம் கிடையாது.
ஆனால் அதிலிருந்து மீண்டு வருவதற்கு சில எளிமையாக வழிகளை முயற்சிக்கலாம். தனியாக இருப்பதை முதலில் முற்றாக தவிர்க்க வேண்டும். முடிந்தவரை இயற்கையான சூழலில் இருக்க முயற்சிசெய்யலாம்.
கோபத்திலோ இல்லது கவலையிலோ உடனடியாக இன்னொரு காதல் உறவை ஏற்படுத்திக்கொள்ள ஒருபோதும் நினைக்காதீர்கள்.இது இன்னும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்த கூடும். உணர்வுகளை நெருங்கிய நண்பர்களிடம் அல்லது உறவினர்களிடம் பகிர்ந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
இந்த காதல் தோல்வி குறித்து சமூகத்தவர் என்ன நினைப்பார்கள் என நினைத்து வருந்துவதை சுத்தமாக நிறுத்திவிடுங்கள். நாம் நினைக்கும் அளவுக்கு இது முக்கியம் இல்லை.
பிடித்த உணவுகளை சாப்பிடுவது உடற் பயிற்சி செய்வது நல்ல இசையை கேட்பது மற்றும் இயற்கை எழில் நிறைந்த இடங்களுக்கு சுற்றுலா செல்வது போன்ற விடயங்களில் ஈடுபடுவது விரைவில் காதல் தோல்வியில் இருந்து வெளிவர துணைப்புரியும்.
முடிந்தவரை உங்கள் வேலையில் அல்லது கல்வியில் உங்கள் கவனத்தை முழுமையாக திசைத்திருப்புங்கள். கவலைப்படுவதற்கு பயன்படுத்தும் சக்தியை வாழ்வில் வெற்றியடைவதற்கு பயன்படுத்துங்கள்.
கவலை உணர்வை கட்டுப்படுத்தவே முடியாத பட்சத்தில் சிறந்த உளநல மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது தீர்வு கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |