மன அழுத்தத்தால் அவதிப்படுகின்றீர்களா? இந்த விடயங்கள் தீர்வு கொடுக்கும்
தற்காலத்தை பொருத்தவரையில் அதிகரித்த வேலைப்பளு, சமூக வளைத்தளங்களின் பெருக்கம், முறையற்ற உணவுபழக்கம் போதிய தூக்கமின்மை போன்ற பல்வேறு காரணங்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது.
இருப்பினும் மன அழுத்தம் பற்றிய விழிப்புணர்வு பெரும்பாலானவர்கள் மத்தியில் இருப்பதில்லை. மன அழுத்தத்தை ஆரம்ப கட்டத்திலேயே சரிப்படுத்த தேவையான முயற்ச்சிகளை எடுக்க வேண்டியது அவசியம்.
மன அழுத்தம் தீவிரமடையும் போது இது தற்கொலை எண்ணத்தை தூண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே மன அழுத்தம் குறித்து ஆரம்பத்திலேயே கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மன அழுத்த பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் எளிமையான சில வழிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எப்படி மன அழுத்ததில் இருந்து விடுப்படுவது?
அதிக விரக்தியாகவும் சோர்வாகவும் உணர்கின்றீர்கள் என்றால் நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.இப்படி உணர்வுகள் தோன்றும் போது அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம்.
மன அழுத்தத்தை உணரும் போது உங்களுக்கு பிடித்தமான உணவுகளை வீட்டில் சமைத்தோ அல்லது கடையில் வாங்கியோ சாப்பிடுவது உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் இதனால் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும்.
அதிகரித்த வேலைபளுவால் ஏற்படுகின்ற மன அழுத்தத்தை போக்க தினசரி உடற்பயிற்ச்சியில் ஈடுப்படுவது பெரிதும் துணைப்புரியும். அல்லது தியானம் செய்யலாம்.
மன அழுத்தம் குறைய தூக்கம் இன்றியமையாதது.போதிய தூக்கமின்மையானது உடலில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றது.
சரியான நேர்ததில் படுக்கைக்கு செல்வது மற்றும் தூங்கும் வரையில் போன் பாவிப்பதை தவிர்ப்பது போன்ற விடயங்கள் மன அழுத்தத்தில் இருந்த விடுப்பட உதவும்.
பெரும்பாலும் தனியாக இருப்பவர்களே அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றார்கள். எனவே உங்களை சுற்றி எப்போதும் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்ள் இருக்கும் படி பார்த்துக்கொள்வது மன அழுத்தத்தை போக்க பெரிதும் துணைப்புரியும்.
கொஞ்சமாக குடித்தாலும் சரி, அதிகமாக குடித்தாலும் சரி குடிப்பழக்கம் கடுமையான ஆரோக்கிய பிரச்சினைகளையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். உடலில் ஆல்கஹால் எடுத்துக்கொள்வதை முற்றிலும் தவிர்பதே மன அழுத்தத்தை போக்க உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |