நீங்க எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கணுமா? அப்போ இந்த விடயங்களை கட்டாயம் பண்ணுங்க
பொதுவாகவே உலகில் மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால் அவ்வளவு எளிதாக அனைவராலும் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை.
குறிப்பிட்ட சிலர் எப்போதும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருப்பார்கள். இவர்களை பார்க்கும் போதே நமக்கு ஏன் அப்படி இருக்கமுடியவில்லை என்பது போன்ற எண்ணங்கள் தோன்றும்.
நீங்களும் அப்படி யாரையாவது பார்த்து நினைத்திருக்கின்றீர்களா? உண்மையில் அவர்கள் எப்போதும் தங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள பெரிதாக எதையும் செய்தில்லை நீங்களும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என விரும்பினால் இந்த 5 விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும். இது என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
செய்யும் வேலையில் கவனம் செலுத்துதல்
அன்றாட வேலைகளை எல்லாம் சரியாக செய்ய பழக்கிக்கொண்டால் மகிழ்ச்சி தானாக வரும். செய்யும் வேலையில் முமுமையாக கவனத்தை செலுத்தினால் அந்த வேலையில் தவறு நடப்பதற்காக வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கும்.
இவ்வாறு பழக்கப்படுத்திக்கொள்வதால் பயம், பதட்டம் போன்றவற்றில் இருந்து இலகுவில் விடுபடலாம். உங்கள் மனதில் எந்த அச்சமும் இல்லை என்றாலே எப்போதும் மகிழ்ச்சியாக நபராக தான் இருப்பீர்கள்.
மேலும் உங்கள் மனதுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் விடயங்களான சுற்றுலா செல்வது, பாடல் பாடுவது என பொழுதுபோக்கை கூட ரசித்து செய்வதற்கு மனதை பழக்கப்படுத்தினால் நீங்கள் மட்டுமன்றி உங்களை சுற்றி இருப்பவர்களையும் கூட மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும்.
அன்பாக நடந்து கொள்ளுதல்
மற்றவர்களுடன் அன்பாக நடந்துக்கொண்டால் அவர்களும் உங்களிடம் மெண்மையாக நடந்துக்கொள்வார்கள். புதிய மனிதர்களாக இருந்தாலும் சரி தெரிந்த நபர்களாக இருந்தாலும் சரி அவர்களுடன் சிரித்த முகத்ததுடன் பேசி பழகும் போது உங்கள் மன அழுத்தம் குறைந்து எப்போதும் மகிழ்ச்சியான உணர்வு பிறக்கும்.
உறவுகளுடன் நேரம் செலவழித்தல்
உறவுகளுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நிச்சயம் நேரத்தை ஒதுக்கிக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.குடும்பத்துடன் நாம் எந்தளவுக்கு பிணைப்புடன் இருக்கின்றோமோ அந்தளவுக்கு மகிச்சி நம்மிடம் வெளிப்படும்.
குடும்பத்தில் பிரச்சினை இருந்தால் வேலையிலும் சரி வேறு எந்த விடயத்திலும் நம்மால் முழு மனதுடன் கவனம் செலுத்த முடியாது. உறவுகளை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டால் எா்போதும் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காது.
பாராட்ட கற்றுக்கொள்ளுங்கள்
மற்றவர்களை பாராட்ட முடியாதவர்களால் ஒருபோதும் பாராட்டத்தக்க விடயங்களை செய்யவே முடியாது. மற்றவர்களின் குறைகளை விமர்ச்சிக்கும் குணம் இருந்தால் அதனை உடனடியாக மாற்றிக்கொள்ளுங்கள் இது உங்களின் மகிழ்ச்சிக்கு மிகப்பெரும் தடையாக இருக்கும். மற்றவர்களிடம் இருக்கும் நல்ல விடயங்களை பாரட்டும் பண்பு கொண்டவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
நன்றியோடு இருத்தல்
இந்த வாழ்க்கை நமது உடல், அறிவு, அனுபவம் என அனைத்தும் மற்றவர்களால் நமக்கு கொடுக்கப்பட்து தான். நம்மால் தனித்து எதையும் செய்துவிட முடியாது. எனவே மற்றவர்கள் செய்யும் சின்ன சின்ன உதவிகளையும் கூட மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் செய்த உதவிக்கு எப்போதும் நன்றியுடன் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். இந்த பழக்கம் நம் மனதை எப்போதும் சுத்தமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |