கெட்ட கனவுகளால் இரவில் தூக்கமின்றி அவதிப்படுகிறீர்களா? இதை மட்டும் செய்து பாருங்க...

Vinoja
Report this article
பொதுவாகவே நிம்மதியான தூக்கம் அனைவருக்கும் முக்கியம். முறையற்ற தூக்கம் அல்லது தூக்கம் இன்மை பிரச்சினைகள் உடல் ஆரோக்கியத்துக்கு மாத்திரமன்றி உள ஆரோக்கியத்திலும் பாரிய பாதக விளைவுகளை ஏற்படுதுகின்றது.
நன்றாக தூங்கினால்தான் காலையில் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும். ஆனால் சிலருக்கு கெட்ட கனவால் தூக்கம் வருவதில்லை.
ஜோதிட சாஸ்திரப்படி, சில பொருட்களை தலையணைக்கு அடியில் வைப்பது நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும் என்கின்றனர் வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் இது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
நிம்மதியான தூக்கத்தை பெற...
கனவு காண்பது மிக மிக இயற்கையானது. சிலருக்கு எப்போதாவது கனவுகள் வரும். இன்னும் சிலருக்கோ தினமும் கனவுகள் வரும். இதுபோன்ற பயங்கரமான கனவுகள் வருவதால் மன அமைதி சீர்குழைகின்றது.
இதனால் சரியாக தூங்கவே முடிவதில்லை. ஜோதிட சாஸ்திரப்படி, கெட்ட கனவுகளினால் தூக்கம் வராமல் இருப்பவர்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு துண்டு இஞ்சியை ஒரு சிறிய துணியில் கட்டி தலையணைக்கு அடியில் வைத்தால் கெட்ட கனவுகள் வராது இஞ்சிக்கு நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் சக்தி காணப்படுகின்றது.
ஏலக்காய் கெட்ட கனவுகளையும் தடுக்கும். உங்களுக்கு தினமும் பயங்கரமான கனவுகள் வந்தால் நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் 5-6 சிறிய ஏலக்காயை கட்டிக் கொள்ளுங்கள்.அதனை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் கெட்ட கனவுகள் வராது.
இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் மஞ்சள் மிகவும் மங்களகரமான ஒரு பொருள். தினமும் தூங்கச் செல்வதற்கு முன், ஒரு சிறிய துணியில் ஒரு துண்டு மஞ்சளைக் கட்டி உங்கள் தலையணையின் கீழ் வைக்கவும்.
இதைச் செய்வதன் மூலம் நன்றாக தூங்குவது மட்டுமல்லாமல், வேலை, வணிகம் போன்றவற்றில் சிறந்த வெற்றியைப் பெறவும் இது துணைபுரியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |