தங்கத்திற்கு நிகரான வெள்ளியை அடமானம் வைத்து வங்கி கடன் பெறுவது எப்படி?
இந்தியாவின் ரிசவ் வங்கி தங்கத்தை போலவே இனி வெள்ளியை வைத்தும் கடன் வாங்கும் புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது.
வெள்ளி வங்கி கடன்
அடமானம் வைப்பது என்றால் நம் கண்முன் நினைவு வருவது தங்கம் தான். தங்கம் ஆபரணமாக மட்டும் பார்ப்பது கிடையாது. முக்கிய முதலீடாகவும், செல்வத்தின் அடையாளமாகவும், கலாசாரம், பாரம்பரியம், குடும்பத்தின் ஒரு அங்கமாகவே பார்க்கிறார்கள்.
ஆனால் சமீபகாலமாக இந்தியாவில் தங்கத்திற்கு இணையாக வெள்ளியின் விலையில் அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது தங்கத்தில் முதலீடு செய்பவர்களை விட வெள்ளியின் முதலீடு செய்வர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

காரணம் தங்கம் எல்லோராலும் வாங்க முடியாமல் விலையில் உச்சத்தை அடைந்துள்ளது. எனவே தங்கம் வாங்க முடியாத சாமானிய மக்கள் வெள்ளிப்பொருட்களை எதிர்கால நலனுக்காக முதலீடு செய்யலாம்.
இந்நிலையில் நேற்று (அக்டோபர் 26-ம்தேதி) வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.170-க்கும், ஒரு கிலோ ரூ.1,70,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
எனவே இந்தியாவின் ரிசவ் வங்கி வெள்ளியை அடமானம் வைத்து பணம் பெறும் முறை பற்றி வெளியிட்டுள்ளது. அதன் முழு விபரம் இங்கே

1.வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்கள் மீது மட்டுமே கடன் பெற முடியும்
2.பார் வெள்ளி, இ.டி.எப்., மியூச்சுவல் பண்டுகள் போன்ற நிதி சொத்துகள் மீது கடன் பெற முடியாது.
3.அடகு வைக்கப்படும் வெள்ளியின் மதிப்பில், அதிகபட்சமாக 85 சதவீதம், 2.5 லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கும்.
4.ஐந்து லட்சம் ரூபாய் வரை தேவைப் பட்டால், அடகு வைக்கப்படும் வெள்ளியின் மதிப்பில் 80% கடன் கிடைக்கும்.

5.ஐந்து லட்சத்திற்கு மேல் நிதி தேவைப்பட்டால், அடகு வைக்கப்படும் வெள்ளியின் மதிப்பில் 75% கடன் கிடைக்கும்.
6.வெள்ளி விலையில் ஏற்றத்தாழ்வு இருப்பதால், கடனை திரும்ப செலுத்தும் வரை இதை பராமரிக்க உத்தரவு.
7.ஒரு நபர் 10 கிலோ வரை வெள்ளி நகைகளை அடகு வைக்கலாம்.
8.அரை கிலோ வரை வெள்ளி நாணயங்களை அடகு வைக்க அனுமதி.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |