உதடு ரொம்ப கருப்பா அசிங்கமா இருக்கா? அப்போ இந்த 3 பொருளை அப்ளை பண்ணுங்க
Skin Care
Beauty
By DHUSHI
பொதுவாக இயற்கையாகவே உதடு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டுமென்று பலரும் ஆசைப்படுவார்கள்.
இதனை தக்க வைத்து கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் உதடுகளை முறையாக பராமரிப்பதோடு உதடுகளில் உள்ள இறந்த செல்களை அவ்வப்போது நீக்க வேண்டியது அவசியமாகும்.
இது போன்ற விடயங்களை தொடர்ந்து செய்வதால் பட்டு போன்ற மென்மையான உதடுகள் கிடைக்கும்.
அந்த வகையில் சிவப்பான அழகிய உதடுகளை பெற என்னென்ன டிப்ஸ்களை பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
1. லிப் ஸ்கரப்
- ஒரு தேக்கரண்டி சர்க்கரையை எடுத்து கொள்ளவும்.
- இதனை கொண்டு உதட்டை மெதுவாக மசாஜ் செய்யவும்.
- இப்படி மசாஜ் செய்வதால் உதட்டில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேற்றப்படும்.
- பின்னர் தேன் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு உதட்டை ஈரப்படுத்தவும்.
2. டூத்ப்ரஷ் பயன்பாடு
- மென்மை தன்மையான டூத்ப்ரஷை பயன்படுத்தி இறந்த தோல்களை உரித்தெடுக்கவும்.
- பின்னர் வெதுவெதுப்பான நீரில் ப்ரஷை நனைத்து அதனை கொண்டு உதட்டை வட்டமாக தேய்த்து கொடுத்த பின்னர் உதட்டை கழுவ வேண்டும்.
3. உதடு ஈரப்பதத்துடன் வைத்து கொள்ளவும்
- உதட்டில் கருமைப்படிவதற்கு முக்கிய காரணம் உதடு காய்ந்து காணப்படுதல் தான். இதனால் உதட்டை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்து கொள்ள வேண்டும்.
- நாள் முழுவதும் உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க போதுமானளவு தண்ணீர் பருகுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US