தோஷம் நீக்கும் வெந்தயம்.. எப்படி பரிகாரம் செய்யணும்-ன்னு தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக மனிதர்களாக பிறந்த அணைவருக்கும் பிறந்த நாள் துவக்கம் அவர்களின் எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதனை ஜோதிடம் கணிக்கின்றது.
இதனால் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அது முன்னரே நமக்கு கணிக்கப்பட்டதாக தான் இருக்கும். சிலருக்கு சர்ப தோஷம் போன்று தீராத நீக்க முடியாத தோஷங்கள் இருக்கும்.
இதனை சரியான பரிகாரம் செய்தால் குறுகிய காலத்தில் இல்லாமலாக்கி வாழ்க்கையை பிரகாசிக்க வைக்கலாம்.
அந்த வகையில் தோஷங்களுக்கு பரிகாரம் செய்யும் போது வெந்தயத்தை பயன்படுத்தலாம் என ஒரு கணிப்பு வெளியாகியுள்ளது.
இந்த கணிப்பு எந்த உண்மையானது? தோஷம் நீங்க அப்படி என்ன தான் செய்ய வேண்டும்? என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
குழந்தை பிறந்தவுடன் இத கண்டிப்பாக செய்ங்க
பொதுவாக குழந்தை பிறந்து முதல் முறையாக வீட்டிற்கு கொண்டு வரும் போது சுத்திப்போடுவது, சூடம் சுற்றுவது, மஞ்சள் தண்ணீரில் சுண்ணாம்பு, வெற்றிலை போட்டு சுற்றுவது ஆகிய சம்பிரதாயங்களை செய்வார்கள். இதனால் குழந்தைகளுக்கு யார் கண்ணும் படாது என முன்னோர்கள் நம்புகிறார்கள்.
அத்துடன் நிறுத்தாமல் ஒரு வெள்ளை நிற காட்டன் துணியால் உப்பு, கடுகு, வெள்ளைத்துணி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கட்டி அதனை கொண்டு குழந்தையை சுற்றி எறிப்பார்கள். இது எதிர்மறையான சக்திகளை குழந்தையிடம் கொண்டு செல்லாமல் பாதுகாக்கும்.
வெந்தய பரிகாரம்
ஒரு பவுலில் நிறைய வெந்தயத்தை எடுத்து அதனை உப்பு டப்பாவிற்கு அருகாமையில் வைத்து விட வேண்டும். ஆனால் திறந்து வைத்திருக்க வேண்டும், எந்த காரணம் கொண்டும் மூடி விடக் கூடாது.
இதனை தொடர்ந்து வாரம் ஒரு முறை இந்த வெந்தயத்தை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, வேறு வெந்தயம் நிரப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால் குடும்பங்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகள், தீட்டுக்கள், தோஷங்கள் என அணைத்தும் மறைந்து விடும். இறுதியாக வெந்தயத்தை ஓடையில் விட்டு விட வேண்டும்.