கால சர்ப்ப தோஷத்தை விரட்டியடிக்கும் பரிகாரம்: நீங்களும் செய்யலாம்- பலன் நிச்சயம்
பொதுவாக நாம் ஜாதிகத்தில் கூறப்படும் ராகு, கேது கிரகங்கள் இரண்டும் நம்முடைய முற்பிறவியில் நிறைவேறாத ஆசைகளுடன் தொடர்புடையது என கூறப்படுகின்றது.
இந்த கிரகங்கள் இடையில் சந்திக்கும் போது கால சர்ப்ப தோஷத்தின் பாதிப்பு உக்கிரமடைகின்றது.
இந்த தோஷம் இருக்கும் ஒருவர் அவரின் வாழ்க்கையில் மிகுந்த இன்னல்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். ராகு மற்றும் கேது என அழைக்கப்படும் கிரகங்கள் பாம்பு கிரகங்களாகும்.
இதில் மற்றைய ஏழு கிரகங்களும் அடைப்பட்டு கிடக்கும் போது அது தான் “சர்ப்பதோஷம்” என அழைக்கப்படுகின்றது.
சர்ப்பதோஷம் இருப்பவர்களுக்கு மற்ற கிரகங்களில் இருந்து எந்த வித நல்லதும் நடக்காது. இவற்றிற்கு தடையாக பாம்பு வந்து நிற்கும்.
சர்ப்பதோஷத்தால் ஏற்படும் பிரச்சினைகள்
- திருமணத் தடை
- வாழ்க்கையில் பிரச்சனை
- திருமண வாழ்க்கை சிக்கல்
சர்ப்பதோஷத்திற்கான பரிகாரம்
- சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சிவ பெருமானை வழிபடுவது மிகப் பெரிய தீர்வாக அமையும்.
- பாம்பினை அணிகலனாக அணிந்திருப்பதால் சிவ பெருமானுக்கே இவற்றை அழிக்கும் சக்தி இருக்கின்றது.
எளிய ஜோதிட பரிகாரம்
- சிவ லிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும். அத்துடன் இந்த அபிஷேகத்தை திங்கட்கிழமைகளில் தான் செய்ய வேண்டும்.
- நாக சந்திரேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று நாக தேவதையின் அருளை வேண்டவும்.
- நாக பஞ்சமி நாளில் கோயிலுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொள்வதால் இந்த தோஷம் நீங்கும்.
- சர்ப்ப தோஷ பூஜையில் கலந்து கொண்டு பூஜை செய்ய வேண்டும். புரோகிதர்களை வைத்து சரியான முறையில் பூஜைகளை செய்ய வேண்டும்.
- நாகர், நாகினி சேர்ந்து இருப்பது போன்ற உருவத்தை வெள்ளியில் செய்து கங்கை, யமுனை ஆகிய புண்ணிய நதிகளில் விடலாம்.
சொல்ல வேண்டிய மந்திரம்
சேயா சேயாதே தேயா சேயாசே
மாயா மாயாவா வாயா மாயாமா
வாயா மாவாயா யாயா சேமாசே
யோயா நேயாவோ யாயே தேயாளே..
முக்கிய குறிப்பு
தினமும் 108 முறை உச்சரித்தால் தோஷம் நீங்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |